மிருடன் முதல் - மின்மினி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மிருடன் சிவபிரான் .
மிருடார்த்தகம் இல்லாதது .
மிருடானி பார்வதி .
மிருடை துர்க்கை .
மிருத்தஞ்சயன் காண்க : மிருத்தியுஞ்சயன் .
மிருத்தனம் காண்க : துவரை .
மிருத்தாலகம் உவர்மண் ; துவரை .
மிருத்திகை மண் ; நிலம் .
மிருத்தியம் மண் .
மிருத்தியு இறப்பு ; யமன் ; தீராப்பகைவன் ; காண்க : ஆணவமலம் .
மிருத்தியுஞ்சயம் இறப்பை நீக்கவல்ல மந்திரம் .
மிருத்தியுஞ்சயன் யமனை வென்றவனான சிவபெருமான் .
மிருத்து மண் ; யமன் ; சாவு .
மிருதகம் பிணம் .
மிருதங்கம் மத்தளம் ; முழவு ; ஒலி ; மூங்கில் ; ஒலிக்கருவிகளுள் ஒன்று .
மிருதசஞ்சீவி உயிர்தரும் மருந்து .
மிருதசஞ்சீவினி உயிர்தரும் மருந்து .
மிருதண்டன் சூரியன் .
மிருதம் பிணம் ; சாவு ; போர் ; நஞ்சு ; வச்சநாபி ; இரந்து தேடிய பொருள் ; பிறவிப் பாடாணவகை ; காண்க : தண்ணீர்விட்டான் .
மிருதாண்டன் காண்க : மிருதண்டன் .
மிருதாரசிங்கி தூய்மை செய்யப்படாத ஈயம் ; ஈயம் ; பூண்டுவகை ; வைப்புப் பாடாணவகை .
மிருதி சாவு ; நினைவு ; அறநூல் ; அறநூல் வல்லோன் ; பார்வதி .
மிருதித்தல் இறத்தல் .
மிருது மென்மை ; சாந்தம் ; மந்தம் ; மழுங்கல் ; நொய்ம்மை ; சமுத்திரப்பாலை ; வெள்ளரி ; சாவு .
மிருதுபலம் காண்க : பேரீந்து .
மிருதுமம் காண்க : இலாமிச்சு(சை) .
மிருதுவாதம் சிறுதென்றல் .
மிருதுளம் மென்மையானது .
மிருதுன்னகம் பொன் .
மிருதை பூமி .
மிருநாளம் தாமரைத்தண்டு ; காண்க : இலாமிச்சை ; இலாமிச்சு(சை) .
மிலாங்கிலி காண்க : செங்காந்தள் ; திருநீற்றுப்பச்சை .
மிலாரடி கலக்கம் ; உன்மத்தம் .
மிலாறு வளார் , இளங்கொம்பு .
மிலேச்சன் நாகரிகமற்ற புறநாட்டான் ; திருத்தமற்ற மொழியைப் பேசுவோன் ; அனாரியன் ; அறிவீனன் ; வணிகனுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்த மகன் ; தாழ்ந்தவன் ; வேடன் ; சூரியன் .
மிலைச்சுதல் காண்க : மிலைதல் .
மிலைத்தல் மயங்குதல் ; கனைத்தல் .
மிலைதல் சூடுதல் .
மிழலை மழலைச்சொல் ; சோழநாட்டின் ஒரு பகுதி .
மிழற்றல் சொல்லுதல் ; மழலைச்சொல் ; பேசலால் எழுமொலி .
மிழற்றுதல் மெல்லக் கூறுதல் ; மழலைச்சொல் சொல்லுதல் .
மிளகரணை காட்டுமிளகு .
மிளகாய் காரமுள்ள காய்விளையும் செடிவகை .
மிளகாய்ப்பொடி உணவுக்குக் கூட்டாகச் சேர்க்கும் மிளகாயின் தூள் ; குழம்பிற்குப் பயன்படுத்தும் மிளகாய் முதலியவற்றாலான கூட்டுத்தூள் .
மிளகி ஒரு சிறுநெல்வகை .
மிளகு காட்டுமிளகு ; திரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய் ; காண்க : மிளகுசம்பா .
மிளகுகரணை காண்க : மிளகரணை .
மிளகுசம்பா மிளகுபோன்ற சிறுமணிகளையுடைய உயர்ந்த சம்பாநெல்வகை .
மிளகுசாதம் மிளகுபொடி , சீரகம் முதலியன சேர்த்துச் செய்த பொங்கல்வகை .
மிளகுசாறு மிளகு அதிகம் சேர்த்த இரசம் .
மிளகுதண்ணீர் மிளகு அதிகம் சேர்த்த இரசம் .
மிளகுதிரி அம்மைவகை .
மிளகுதைலம் மிளகு சேர்த்துச் செய்த தைலம் .
மிளகுபொடி மிளகுதூள் ; மிளகும் சீரகமும் உப்பும் கலந்து சோற்றோடு உண்ண உதவும் பொடி .
மிளகுரசம் காண்க : மிளகுசாறு .
மிளப்பு இலவங்கம் .
மிளிர் பெருமை ; ஒளி .
மிளிர்த்தல் புரட்டுதல் ; கீழ்மேலாக்குதல் .
மிளிர்தல் புரளுதல் ; கீழ்மேலாதல் ; குதித்தல் ; ஒளிசெய்தல் ; பெருமையடைதல் .
மிளிறு கரடி .
மிளை காவற்காடு ; குறுங்காடு ; சிறுதூறு ; காட்டுவேலி ; காவல் .
மிற்கு இரை ; மென்மை ; பேசுதல் .
மிறல் பெருமை .
மிறுக்கு மிடுக்கு ; வருத்தம் .
மிறை அச்சம் ; குற்றம் ; வருத்தம் ; வேதனை ; வளைவு ; அரசிறை .
மிறைக்கவி காண்க : சித்திரகவி .
மிறைக்கொளிதிருத்துதல் ஆயுதத்தின் வளைவுநீக்குதல் .
மிறைக்கொளுவுதல் ஆயுதத்தின் வளைவுநீக்குதல் .
மிறைத்தல் துன்புறுத்தல் ; விறைத்தல் ; மிடுக்காயிருத்தல் ; துன்பப்படல் ; பாடுபடல் .
மின் மின்னல் ; ஒளி ; பெண் ; முன்னிலையேவற்பன்மை விகுதியுள் ஒன்று .
மின்சாரக்கம்பி மின்னாற்றல் செல்லும் கம்பி .
மின்சாரம் பொருளணுக்களின் அசைவால் ஏற்படும் ஒருவகையாற்றல் .
மின்சாரயந்திரம் மின்னாற்றலை உண்டாக்கும் பொறி .
மின்சாரவண்டி மின்னாற்றலால் இயங்கும் தொடர்வண்டி .
மின்மினி ஒளிவீசும் ஒரு பூச்சிவகை .