மூதம் முதல் - மூலட்டானம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மூதம் இந்திரியம் .
மூதரித்தல் மெய்ப்பித்தல் .
மூதலித்தல் மெய்ப்பித்தல் .
மூதறிதல் அறிவுமுதிர்தல் ; பழைமையான செய்திகளை அறிதல் .
மூதறிவாளன் அறிவுமுதிர்ந்தோன் .
மூதறிவு பேரறிவு .
மூதா கிழட்டுப்பசு ; காண்க : இந்திரகோபம் .
மூதாக்கள் முன்னோர் .
மூதாட்டி முதியவள் .
மூதாதை பாட்டன் .
மூதாய் பாட்டி ; காண்க : இந்திரகோபம் .
மூதாளர் முதியவர் .
மூதானந்தம் பேரின்பம் ; தன் கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பைக் கண்டோர் கூறும் புறத்துறை .
மூதிக்கம் காண்க : சிவனார்வேம்பு .
மூதிரி எருமை .
மூதிரை திருவாதிரை நாள் ; சிவபிரான் .
மூதில் பழங்குடி ; பழைய மறக்குடி .
மூதிற்பெண்டிர் மறக்குடி மகளிர் .
மூது முதுமை ; ஈகை .
மூதுணர்தல் நான்றாகவுணர்தல் .
மூதுணர்ந்தோர் அறிவுமுதிர்ந்தோர் .
மூதுணர்வு முதிர்ந்த அறிவு .
மூதுரை பழமொழி ; ஒரு நீதிநூல் ; மறை , வேதம் .
மூதுவர் முன்னோர் .
மூதூர் பழைய ஊர் .
மூதேவி திருமகளுக்கு முன்பிறந்தாள் ; அழகில்லாள் ; தீப்பேற்றின் அதிதேவதை .
மூதேவிகொடி மூதேவியின் கொடியாகிய காகம் .
மூதேவிபடை மூதேவியின் ஆயுதமான துடைப்பம் .
மூதேவியூர்தி மூதேவி ஏறும் கழுதை .
மூதை வெட்டித்திருத்திய காடு ; காண்க : மூதணங்கு ; முந்தை ; சங்கஞ்செடி .
மூப்பர் பெரியோர் ; கிறித்தவமதத் தலைவருள் ஒருவகையார் .
மூப்பன் ஒருசார் சாதியாரின் தலைமைக்காரன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; முதியோன் .
மூப்பி முதுமகள் ; தலைவி .
மூப்பு முதுமை ; தலைமை ; பிடிவாதம் .
மூய் மூடி ; பூப்பெட்டி .
மூய்தல் மூடுதல் ; நிரப்புதல் ; நெருங்கிச்சூழ்தல் ; முடிதல் ; துப்புதல் .
மூர்க்ககுணம் மூடத்தன்மை ; கடுஞ்சினம் ; பிடிவாதம் .
மூர்க்கத்தனம் மூடத்தன்மை ; கடுஞ்சினம் ; பிடிவாதம் .
மூர்க்கம் காண்க : மூர்க்ககுணம் ; நாக்குப்பூச்சி ; கொண்ட கருத்துவிடாமை ; முரட்டுப்பலம் ; நாகப்பாம்பு .
மூர்க்கவெறி அடங்காத கடுஞ்சினம் .
மூர்க்கன் மூடன் ; கடுஞ்சினமுள்ளவன் ; பிடிவாத குணமுள்ளவன் ; அகங்காரன் ; நாகப்பாம்பு ; மரவகை .
மூர்க்கு பிடிவாதம் ; செருக்கு .
மூர்க்கை பிடிவாத குணமுள்ளவள் ; அகங்காரி ; மூடத்தன்மை ; கடுஞ்சினம் ; பிடிவாதம் .
மூர்ச்சனம் நினைவுமயங்குதல் : நெட்டுயிர்ப்பு .
மூர்ச்சனை காண்க : மூர்ச்சனம் ; கமகம் பத்தனுள் ஒன்று .
மூர்ச்சித்தல் நினைவுமயங்கிக் கிடத்தல் ; பெருமூச்சு விடுதல் .
மூர்ச்சிதம் அறிவின்மை ; உயரம் ; நினைவு மயக்கம் ; வாட்டம் .
மூர்ச்சை நினைவுமயங்கிக் கிடத்தல் ; வாட்டம் ; கமகம் பத்தனுள் ஒன்று ; கூர்மை .
மூர்த்தம் வடிவுடைய பொருள் ; உடம்பு ; உறுப்பு ; தலை ; காண்க : முகூர்த்தம் .
மூர்த்தன்னியம் தலைமை ; ஊக்கமிகுதி .
மூர்த்தன்னியன் தலைமையானவன் ; கிளர்ச்சியுடையவன் ; ஊக்க மிகுதியுடையோன் .
மூர்த்தி உடல் ; உருவம் ; கடவுள் ; அருகன் ; புத்தன் ; சிவன் ; சத்தி ; தவவேடமுடையவன் ; பெரியோர் ; தலைவன் ; பொருள் ; மாதிரி .
மூர்த்திகரம் தெய்வத்தன்மை ; தெய்வச்செயல் .
மூர்த்திகன் குமரன் ; வயிரவன் .
மூர்த்திமான் திருமேனி .
மூர்த்தீகரித்தல் தெய்வம் முதலியன வடிவு கொள்ளுதல் .
மூரல் பல் ; புன்சிரிப்பு ; சோறு ; பால் .
மூரலித்தல் புன்முறுவல் செய்தல் .
மூரன்முறுவல் புன்சிரிப்பு .
மூரி வலிமை ; பெருமை ; பழைமை ; கிழம் ; எருமை ; எருது ; இடபராசி ; திமில் ; துண்டம் ; காண்க : முகரியோலை ; முரண் ; சோம்பல் முரிப்பு ; சோம்பல் ; நெரிவு .
மூரிநிமிர்தல் சோம்பல்முரித்தல் .
மூரிபோதல் சோம்பல்முரித்தல் .
மூருவம் சிறுசெடிவகை .
மூலக்கடுப்பு நோய்வகை .
மூலக்கிரந்தி நல்ல இரத்தம் கெடுதலால் வரும் நோய்வகை ; மூலநோய்வகை .
மூலக்கூறு பொருள்களின் அடிப்படையான தத்துவம் .
மூலகந்தம் காண்க : இருவேரி(லி) .
மூலகபல்லவம் முருங்கைமரம் .
மூலகம் கிழங்கு ; முள்ளங்கிக்கிழங்கு ; காண்க : ஆடுதின்னாப்பாளை .
மூலகவொளி மூலாதாரத்திலுள்ள சூடு ; வயிற்றுத் தீ .
மூலகாரணம் முதற்காரணம் .
மூலச்சூடு நோய்வகை ; காண்க : கணைச்சூடு ; மூலநோயால் உண்டாகும் எரிச்சல் .
மூலச்சோதி கடவுள் .
மூலட்டம் திருவாரூரிலுள்ள சிவ ஆலயம் .
மூலட்டானம் திருவாரூரிலுள்ள சிவ ஆலயம் .