மூலட்டானன் முதல் - மூழக்கு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மூலட்டானன் திரவாருரில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் ; காண்க : மூலவர் .
மூலத்தானம் ஆலயங்களின் கருவறை ; அடிப்படை ; காண்க : மூலவர் ; அரசிருக்கை .
மூலதனம் முதற்பொருள் ; முன்னோர் சொத்து ; ரொக்கப்பணம் .
மூலநாசம் அடியோடு அழிகை .
மூலநாடி காண்க : சுழுமுனை .
மூலநாள் பத்தொன்பதாம் நட்சத்திரம் .
மூலநோய் மலவாயிற் காணும் நோய்வகை ; காண்க : ஆணவமலம் .
மூலப்பகுதி முக்குணமுந் தோன்றுதற்கிடமாகிய பிரகிருதி தத்துவம் ; பிரகிருதி .
மூலப்படை அறுவகைப் படையுள் நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் படை .
மூலப்பிரகிருதி காண்க : மூலப்பகுதி .
மூலபண்டாரம் சேமவைப்பு .
மூலபதம் சொல்லின் பகுதி .
மூலபலம் காண்க : மூலப்படை .
மூலபவுந்திரம் மூலத்தில் உண்டாகும் புண்கட்டி .
மூலபாடம் உரையில்லாத மூலம் .
மூலம் வேர் ; அடி ; கிழங்கு ; ஆதி ; வாயில் ; காரணம் ; முதன்மை ; காண்க : மூலவர் ; மூலப்பகுதி ; மூலதனம் ; மரம் ; மூலநாள் ; மூலபாடம் ; மூலநோய் ; அண்மை ; சொந்தம் ; பாதரசம் ; சித்திரமூலம் ; பாடாணவகை ; ஆதாரபத்திரம் .
மூலமந்திரம் தலைமை மந்திரம் ; பிரணவம் .
மூலமலம் காண்க : ஆணவமலம் .
மூலர்முறை திருமூலர் அருளிய திருமந்திரம் .
மூலவர் கோயிலின் கருவறையிலுள்ள மூலத்தான மூர்த்தி .
மூலவல்லி வெற்றிலை .
மூலவாசல் கோயிலின் கருவறை வாயில் ; காண்க : பிரமரந்திரம் .
மூலவாயு குடலில் வாதத்தினால் உண்டாகும் நோய் .
மூலவிக்கிரகம் காண்க : மூலவர் .
மூலவியாதி காண்க : மூலநோய் .
மூலவிருள் ஆன்மாவை அநாதியே பற்றியிருக்கும் மலம் ; காண்க : ஆணவமலம் .
மூலவெழுத்து பிற எழுத்துகளுக்குக் காரணமான அகரம் ; 'ஓம் ' என்னும் பிரணவம் .
மூலவேர் அடிவேர் .
மூலவோலை மூலசாசனம் .
மூலாக்கினி உயிர்த்தீயுள் ஒன்றான வயிற்றத்தீ ; மூலாதாரத்திலுள்ள சூடு .
மூலாதாரம் அடிப்படை ; பிறப்புறுப்புக்கும் மலவாய்க்கும் இடையில் உள்ள நான்கிலைத் தாமரை போலிருக்கும் சக்கரம் .
மூலி செடிகொடி ; மூலிகை ; காரணபூதன் .
மூலிகை பச்சிலை ; மருந்தாகப் பயன்படுத்தும் செடிகொடிகளின் வேர் .
மூலியம் விலைக்குக் கொண்ட பொருள் ; விலை ; சம்பளம் ; நிமித்தம் .
மூலை கோணம் ; வீடு ; மூலைத்திசை .
மூலைக்கச்சம் பின் கச்சத்திலிருந்து ஆடை நுனி தொங்கும்படி கட்டும் உடைவகை .
மூலைக்கால் காண்க : முகூர்த்தக்கால் .
மூலைக்குமூலைவரிசை ஒன்றுவிட்டு ஒருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை .
மூலைக்கை வீட்டின் மூலைமுகட்டுச் சட்டம் .
மூலைமட்டம் நேர்கோணம் ; மூலைமட்டம் பார்க்குங் கருவி .
மூலைமுடக்கு காண்க : மூலைமுடுக்கு ; வளைந்துசெல்லும் வழி .
மூலைமுடுக்கு சந்துபொந்து .
மூலையடிவழி குறுக்குவழி .
மூலையோட்டம் நேர்கோணமின்றி மூலையாய் அமைகை .
மூலைவாட்டம் மூலை கோணிய நிலை .
மூலோங்காரம் பிரணவம் .
மூவசைச்சீர் மூன்று அசைகள்கொண்டு வரும் உரிச்சீர் .
மூவட்சி மூன்று கண்களுடைய தேங்காய் .
மூவடிவு ஆண் , பெண் , அலி என்னும் மூவகை உருவம் .
மூவர் பிரமன் , திருமால் , சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ; அப்பர் ; சுந்தரர் , திருஞான சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்கள் ; காண்க : மூவேந்தர் .
மூவரசர் காண்க : மூவேந்தர் .
மூவாசை மண் , பெண் , பொன் என்னும் மூன்றன்பாலுள்ள பற்று ; சவத்தின்மேல் மூடுஞ் சீலை .
மூவாமருந்து அமிழ்தம் .
மூவாமலை மேருமலை .
மூவாமுதல் கடவுள் .
மூவார் மூப்பில்லாதவரான தேவர் .
மூவிடம் தன்மை , முன்னிலை , படர்க்கை என்னும் மூன்றிடங்கள் .
மூவிலை திரிசூலம் ; வில்வம் ; வயற் பயறுவகை .
மூவிலைச்சூலம் திரிசூலம் .
மூவிலைவேல் திரிசூலம் .
மூவிலைவேலோன் திரிசூலத்தைத் தாங்கியவனாகிய வயிரவன் .
மூவினம் பசு , எருமை , ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை ; வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவகை மெய்யெழுத்து .
மூவுதல் விலகுதல் .
மூவுலகம் விண்ணுலகம் , மண்ணுலகம் , பாதாளவுலகம் , ஆகிய மூன்று உலகங்கள் .
மூவுலகளந்தோன் திருமால் .
மூவுலகாளி இந்திரன் ; கடவுள் .
மூவுலகு காண்க : மூவுலகம் .
மூவெயில் காண்க : திரிபுரம் .
மூவேந்தர் சேரர் , சோழர் , பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர் .
மூழ்கடித்தல் மூழ்கச்செய்தல் .
மூழ்குதல் அமிழ்தல் ; மறைதல் ; புகுதல் ; அழுந்துதல் ; தங்குதல் .
மூழ்த்தம் காண்க : முகூர்த்தம் .
மூழ்த்தல் மூழ்கச்செய்தல் ; முதிர்தல் ; மொய்த்தல் ; மூடுதல் ; வளைத்தல் .
மூழ்தல் பற்றிக்கொள்ளுதல் .
மூழக்கு காண்க : மூழாக்கு .