வசதி முதல் - வசைத்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வசதி வீடு ; மருதநிலத்தூர் ; நல்லிடம் ; ஏந்து ; இரவு ; சினாலயம் .
வசந்தகாலம் காண்க : இளவேனில் .
வசந்தத்திருவிழா இளவேனிலில் நடைபெறும் திருவிழா ; காமன்பண்டிகை .
வசந்ததரு மாமரம் .
வசந்ததூதம் குயில் ; மாமரம் ; சித்திரைமாதம் ; பாதிரிமரம் ; ஒரு பண்வகை .
வசந்தபஞ்சமி காமனுக்குரியதாய் மாசிமாதத்து வளர்பிறையில் வரும் பஞ்சமிதிதி .
வசந்தம் இளவேனிற் பருவம் ; சித்திரைமாதம் ; வசந்தத் திருவிழா ; நறுமணம் ; தென்றற்காற்று ; ஒரு பண்வகை ; மணப்பொடி ; காதற்பேச்சு ; சிறிய முத்து ; இந்திரன் மாளிகை .
வசந்தமண்டபம் பூஞ்சோலை நடுவணுள்ள மண்டபம் .
வசந்தமலர் இலவங்கம் .
வசந்தமாலை தென்றலைச் சிறப்பித்துக் கூறும் நூல்வகை .
வசந்தருது காண்க : இளவேனில் .
வசந்தவிழா காண்க : வசந்தத்திருவிழ .
வசந்தன் மன்மதன் ; காமனின் நண்பன் ; இளவேனிற் காலத்துக்குரிய தேவன் ; தென்றல் ; ஒரு கூத்துவகை .
வசந்தனடித்தல் கும்மியடித்தல் ; வசந்தன் கூத்து ஆடுதல் .
வசந்தா ஒரு பண்வகை .
வசந்தி காண்க : இருவாட்சி .
வசந்திகை தேமல் .
வசந்தோற்சவம் காண்க : வசந்தத்திருவிழா .
வசநாவி காண்க : வச்சநாபி(வி) .
வசப்படுத்துதல் தன்னுடையதாக்குதல் .
வசப்படுதல் வயமாதல் ; அகப்படுதல் .
வசம் தன்வயம் ; ஆட்சி ; கீழ்ப்படிதல் ; ஒழுங்கு ; நிலைமை ; இயலுகை ; நேர் ; பக்கம் ; மூலமாய் ; படியெடுக்குந் தாள் ; வசம்பு .
வசம்பு ஒரு மருந்துச்செடிவகை .
வசரம் கோழி .
வசலை பசளைக்கொடி .
வசவன் பசுவின் ஆண்கன்று ; வசுவதேவர் .
வசவி தேவதாசி ; கெட்டநடத்தையுள்ளவள் .
வசவிர்த்திக்கொள்ளுதல் தன் விருப்பப்படி வேலைவாங்குதல் .
வசவு இழிவுரை .
வசன் எல்லை ; நேர் .
வசனநடை உரைநடை .
வசனம் சொல் ; பேசுகை ; உரைநடை ; பழமொழி ; ஆகமவளவை ; உடை ; அரைப்பட்டிகை ; நோன்பு .
வசனாவி காண்க : வச்சநாபி(வி) .
வசனித்தல் சொல்லுதல் ; விவரித்தல் .
வசி பிளவு ; கூர்மை : நுனி கூர்மையான கோல் ; கழுக்கோல் ; தழும்பு ; வாள் ; சூலம் ; இருப்பிடம் ; வசியம் ; தன்வயப்படுத்துவது ; தாழ்ச்சி ; தேற்றுகை ; வசியவித்தைக்குரிய சொல் ; காண்க : வசித்துவம் ; உரைநடை ; வாசிக்கை ; ஐந்தெழுத்து மந்திரவகை ; மழை ; நீர் ; குற்றம் ; வெள்வெங்காயம் .
வசிகம் மிளகு .
வசிகரணம் கலைஞானம் ; புணர்ச்சிக்கு இணக்கம் ; காண்க : வசீகரணம் .
வசிகரம் காண்க : வசீகரணம் ; அழகு ; ஆனைத்திப்பிலி ; சீந்திற்கொடி .
வசிகரித்தல் தன்வயப்படுத்துதல் ; வேண்டுதல் .
வசிகரிப்பு விண்ணப்பம் .
வசிகன் தன்வயத்தன் .
வசித்தல் வாழ்தல் ; தங்குதல் ; பேசுதல் ; காண்க : வசிதல் ; வசியஞ்செய்தல் .
வசித்துவம் எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .
வசிதடி கண்டமாக்கிய துண்டம் .
வசிதல் பிளத்தல் ; வடுப்படுதல் ; வளைதல் .
வசிதை தடுத்தற்கரிய ஆற்றலுடைமை .
வசியகுளிகை தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச் செய்விக்கும் மாயமாத்திரை .
வசியப்பொருத்தம் கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .
வசியம் வசப்படுகை ; காதல் ; கைவசம் ; ஒரு வித்தைவகை ; கிராம்பு .
வசியை கற்புடையவள் .
வசிரம் ஆனைத்திப்பிலி ; கடலுப்பு .
வசிவு பிளத்தலால் உண்டாகும் வடு ; வளைவு ; காமன் .
வசீகரணம் வசியப்படுத்தல் ; காமன் கணைகளுள் வசீகரத்தைச் செய்யும் அம்பு ; பிறரை வசஞ்செய்யும் வித்தை .
வசீகரம் வசமாக்கல் .
வசீகரன் வசியப்படுத்துவோன் .
வசீகரித்தல் தன்வயமாக்குதல் .
வசீரன் வீரன் ; குதிரைவீரன் ; திப்பிலி .
வசு எண்வகை வசுக்கள் ; சுடர் ; அக்கினி தேவன் ; பொன் ; செல்வம் ; கதிர் ; இரத்தினம் ; நீர் ; மரப்பொது ; பசுவின் கன்று ; வெள்வெங்காயம் .
வசுகம் எருக்கஞ்செடி .
வசுகிரி பொன்மலை ; மேருமலை .
வசுதை காண்க : வசுமதி .
வசுந்தரை காண்க : வசுமதி .
வசுநாள் அவிட்டநாள் .
வசுமதி பூமி .
வசுவசி சாதிபத்திரி .
வசுவாசி சாதிபத்திரி .
வசூரை விலைமகள் .
வசூல் சேகரிப்பு ; சேகரிக்கும் வரி முதலியன .
வசூல்பாக்கி நிலுவைத்தொகை .
வசூலித்தல் வரி முதலியவற்றைத் தண்டுதல் .
வசை நிந்தை ; பழிப்பு ; இகழ்ச்சி ; வசைகூறும் பாடல் ; குற்றம் ; அகப்பை ; மலட்டுப்பசு ; பசு ; பெண்யானை ; கணவனுடன் பிறந்தாள் ; பெண் ; மகள் ; நிணம் ; மனைவி .
வசைக்கூத்து நகைச்சுவைபற்றி வரும் கூத்து .
வசைகவி வசைகூறும் பாடல் ; வசைபாடுவோன் .
வசைச்சொல் நிந்தைச்சொல் .
வசைத்தல் வளைத்தல் ; சூழ்தல் .