வசைதல் முதல் - வட்டாட்டு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வசைதல் வசைகூறுதல் ; வளைதல் ; சூழப்படல் .
வசைப்படுதல் வடுப்படுதல் ; குற்றமுறல் .
வசைப்பாட்டு வசைகூறும் பாடல் .
வசையுநர் வசைகூறுவோர் ; பகைவர் .
வசைவு பழிப்பு ; குற்றம் .
வஞ்சகச்சொல் ஏமாற்றும் பேச்சு .
வஞ்சகம் விரகு ; ஏமாற்றம் ; மறைவு ; நரி .
வஞ்சகமூடி ஆமை .
வஞ்சகன் சூழ்ச்சிக்காரன் ; ஏமாற்றுபவன் ; கயவன் ; நரி .
வஞ்சகி சூழ்ச்சிக்காரி ; ஏமாற்றுபவள் .
வஞ்சந்தீர்தல் பழிவாங்குதல் .
வஞ்சப்புகழ்ச்சியணி பழிப்பினால் புகழ்ச்சியும் புகழ்ச்சியால் பழிப்பும் தோன்றக் கூறும் ஓர் அணி .
வஞ்சப்பெண் காளியேவல் செய்பவள் ; காண்க : வஞ்சகி .
வஞ்சபாவம் வஞ்சகத்தன்மை .
வஞ்சம் கபடம் ; பொய் ; கொடுமை ; வாள் ; வஞ்சினம் ; பழிக்குப்பழி ; மாயம் ; சிறுமை ; அழிவு ; மரபு ; பிரபஞ்சம் .
வஞ்சம்வைத்தல் பழிவாங்கப்பார்த்தல் .
வஞ்சவம் பாம்பு .
வஞ்சவிறுதி பொய்ச்சாக்காடு .
வஞ்சன் வஞ்சகமுள்ளவன் .
வஞ்சனம் வஞ்சகம் ; ஒரு மீன்வகை .
வஞ்சனி காண்க : வஞ்சப்பெண் ; வஞ்சகி ; பார்வதி ; மாயையென்னுந் தேவதை ; பெண் ; ஆணை .
வஞ்சனை தந்திரம் ; பொய் ; மாயம் ; காண்க : வஞ்சனைப்புணர்ப்பு ; ஆணை ; தெய்வப்பெண் ; பெண் .
வஞ்சனைப்புணர்ப்பு இசைகொள்ளாவெழுத்துகளின் மேலே வல்லொற்று வந்தபோது மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் புணர்க்கை .
வஞ்சனையாளன் வஞ்சிப்போன் .
வஞ்சி பெண் ; வஞ்சிப்பா ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; வஞ்சிக்கொடி ; சீந்திற்கொடி ; புறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர்மேற் செல்வதைக் கூறுவது ; அரசன் வஞ்சிப்பூவைத் தலையிற் சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர்மேற் செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை ; சேரர் தலைநகரான கருவூர் ; கொடுங்கோளூர் ; சேரநாடு ; குடை ; காண்க : கூகைநீறு ; படகு ; கோயிலிற் காணிக்கை ; செலுத்தும் உண்டியல் பெட்டி .
வஞ்சிக்களம் காண்க : வஞ்சைக்களம் .
வஞ்சிக்கொடி ஒரு கொடிவகை .
வஞ்சிச்சீர் காண்க : வஞ்சியுரிச்சீர் .
வஞ்சித்தல் ஏமாற்றுதல் .
வஞ்சித்திணை புறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர்மேற் செல்வதைக் கூறுவது .
வஞ்சித்துறை இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம் ; அரசன் வஞ்சிப்பூவைத் தலையிற்சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர்மேற் செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை .
வஞ்சித்தூக்கு பரிபாடலில் வஞ்சியடிகளால் வரும் பகுதி .
வஞ்சிநாடு சேரநாடு .
வஞ்சிப்பா நால்வகைப் பாவினுள் ஒன்று .
வஞ்சியன் சேரமன்னன் ; சேரநாட்டான் .
வஞ்சியான் சேரமன்னன் ; சேரநாட்டான் .
வஞ்சியுரிச்சீர் தேமாங்கனி , புளிமாங்கனி , கூவிளங்கனி , கருவிளங்கனி என்று நான்கு வகைப்பட்ட நிரையசையீற்றவான மூவசைச்சீர்கள் .
வஞ்சிவிருத்தம் முச்சீரடி நான்காய் வரும் வஞ்சிப்பாவினம் .
வஞ்சிவேந்தன் மண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர்செய்யும் அரசன் ; வஞ்சிநகர்த் தலைவனான சேரன் .
வஞ்சினம் சூளுரை ; கடுஞ்சினம் .
வஞ்சுளம் வேங்கைமரம் ; அசோகமரம் ; வஞ்சிக்கொடி .
வஞ்சுளன் கரிக்குருவி .
வஞ்சை சேரர் தலைநகரான கருவூர் ; கொடுங்கோளூர் .
வஞ்சைக்களம் சேரர் தலைநகரான கருவூர் ; கொடுங்கோளூர் .
வட்கர் குற்றம் ; காண்க : வட்கார் ; இடைமுரிவு .
வட்கல் வெட்கம் , நாணம் , கூச்சம் ; கேடு ; ஒளிமழுக்கம் .
வட்கார் பகைவர் .
வட்காரம் வெடிகாரம் .
வட்கிலான் பகைவன் .
வட்கு வெட்கம் , நாணம் ; கேடு .
வட்குதல் வெட்குதல் ; கூசுதல் ; கெடுதல் ; தாழ்தல் ; ஒளிமழுங்குதல் ; வளம்பெறுதல் .
வட்டக்கட்டில் வட்டமான அலங்காரத்துடன் செய்த கட்டில்வகை .
வட்டக்குடில் பெருங்குடிசை .
வட்டக்குடை அரசருக்குரிய குடை .
வட்டக்கோள் காண்க : வட்டம் .
வட்டகை நாட்டுப்பகுதி ; சுற்றுப்பகுதி ; சிறுகிண்ணம் ; வட்டில் ; காண்க : வட்டகைநிலம் ; சில ஊர்களைக்கொண்ட பகுதி ; வண்டிச்சக்கர வட்டை .
வட்டகைநிலம் அடைப்புக் கட்டிய நிலம் .
வட்டணம் பரிசை ; நெடும்பரிசைவகை .
வட்டணித்தல் வட்டமாக்குதல் ; வட்டமாதல் .
வட்டணை மண்டலம் ; உருண்டை ; வட்டமான செலவு ; இடசாரி வலசாரியாகச் சுற்றுகை ; காண்க : கமலவருத்தனை ; வட்டத்தோல் ; தாளக்கருவி ; தாளம்போடுகை ; அடிக்கை ; மொத்துகை ; வட்டமான அணை .
வட்டணையுறுத்தல் தாளம்போடல் .
வட்டத்திரி துப்பாக்கிக்கு நெருப்புவைக்குந் திரி ; காதிடு திரி .
வட்டத்திருப்பி காண்க : ஆடுதின்னாப்பாளை ; கொடிவகை ; பூண்டுவகை .
வட்டத்துத்தி ஒரு சிறுசெடிவகை .
வட்டத்தோல் கேடகம் .
வட்டப்பாலை தமிழிசையின் நால்வகைப் பாலையுள் ஒன்று .
வட்டப்பாறை வட்டமான பாறை ; விளைவற்ற கற்பாங்கான பகுதி ; சந்தனக்கல் .
வட்டப்பூ கால்விரலணிவகை .
வட்டம் மண்டலம் ; பரிவேடம் ; குயவன் திரிகை ; வண்டிச்சக்கரம் ; தடவை ; சுற்று ; ஒருகோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றி வருங் காலம் ; சுற்றுப்பகுதி ; சில ஊர்களைக் கொண்ட பகுதி ; வட்டமான செலவு ; அப்பவகை ; சந்தனக்கல் ; ஆலவட்டம் ; வாகுவலயம் ; தராசுத்தட்டு ; கைம்மணி ; கேடகம் ; முத்துவகை ; பீடம் ; குளம் ; கொள்கலம் ; நீர்ச்சால் ; நீர்வீசுகருவி ; வளைவு ; பாராவளை ; ஆடை ; எல்லை ; திருத்தம் ; யானையின் நடுச்செவி ; ஐந்நூறு சால்கொண்ட நீரளவு ; தாழ்வு ; காட்டுமரவகை ; தோறும் ; நாணயமாற்றின் வட்டம் ; ரொக்க வாணிகத்திற் கொடுக்குந் தள்ளுபடி ; ஊதியம் .
வட்டம்போடுதல் காண்க : வட்டமிடுதல் ; சூடடிக்க நெற்கதிர்களை நிலத்திற் பரப்புதல் .
வட்டமிடுதல் பறவைமுதலியன சுற்றிவருதல் ; உருண்டையாதல் ; சூழ்ந்துவருதல் ; நோக்கங்கொண்டு சுற்றுதல் .
வட்டரவு வட்டவடிவு .
வட்டன் வட்டுப்போன்ற உடலுடையவன் ; ஒவ்வொரு முறையும் .
வட்டா வாயகன்ற பாண்டம் .
வட்டாட்டு வட்டுக்கொண்டாடுஞ் சூதாட்டம் .