சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வட்டாடுதல் | வட்டை உருட்டிச் சூதாடுதல் . |
வட்டாணி | திறமை . |
வட்டாரம் | காற்றுப்பகுதி ; வீட்டின் சுற்றுப்புறம் ; வீடு ; தானியக்களஞ்சியம் . |
வட்டி | கடகப்பெட்டி ; கூடை ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; பலகறை ; வழி ; கிண்ணம் ; கருவுற்றாளுக்கு உண்டாகும் மயக்கம் ; ஒரு விருதுவகை ; பணத்தைப் பிறன் பயன்படுத்தியதற்காக உடையவன் பெறும் ஊதியம் ; இலாபம் . |
வட்டிக்குவட்டி | வட்டித்தொகைக்குக் கொடுக்கும் மேல்வட்டி ; வட்டியை முதலோடு சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்கும் வட்டி . |
வட்டிகை | சித்திரம் எழுதுங் கோல் ; சித்திரம் ; சுற்றளவு ; வட்டம் ; கைம்மணி ; கூடை ; ஒரு விருதுவகை ; ஓர் ஓடவகை ; நால்வகைச் சாந்தினுள் ஒன்று . |
வட்டிகைப்பலகை | ஓவியனுக்குப் பயன்படும் வண்ணக்குழம்பு வைக்கும் பலகை . |
வட்டிகைப்பாவை | சித்திரப்பதுமை . |
வட்டித்தல் | வட்டமாதல் ; சுழலுதல் ; உறுதிமொழி யெடுத்தல் ; தாளம்போடல் ; தோள் புடைத்தல் ; சுழற்றுதல் ; உருட்டுதல் ; பரிமாறுதல் ; கட்டுதல் ; எழுதுதல் ; வளைத்தல் ; கடிதல் . |
வட்டிப்பு | வட்டம் ; சூள் . |
வட்டியில்லாக்கடன் | வட்டியின்றிக் கொடுக்குங் கடன்தொகை ; திருப்பிச்செய்தலை எதிர் நோக்கிக் கொடுக்கும் நன்கொடை ; மொய் . |
வட்டில் | கிண்ணம் ; உண்கலம் ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; நாழிகைவட்டில் ; அம்புக்கூடு ; கூடை ; வழி ; ஒரு விருதுவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை . |
வட்டிற்பூ | தாமரைப்பூ . |
வட்டினி | பந்தயப்பொருள் . |
வட்டு | சூதாடுங் கருவி ; திரட்சி ; திரண்ட பொருள் ; நீர்வீசு கருவிகளுள் ஒன்று ; ஒரு விளையாட்டுக் கருவிவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை ; முள்ளிச்செடி ; சிறுதுணி ; கண்டசருக்கரை ; குடையில் கம்பிகள் கூடுமிடம் . |
வட்டுடை | முழந்தாளளவாக உடுக்கும் சிறப்புடை ; ஆடை . |
வட்டுப்போர் | சூதாட்டம் . |
வட்டுவப்பை | வெற்றிலை முதலியனவைக்கும் பை ; மருந்துப்பை ; பையின் உட்பை . |
வட்டுவம் | வெற்றிலை முதலியனவைக்கும் பை ; மருந்துப்பை ; பையின் உட்பை . |
வட்டெலி | மரவெலி . |
வட்டெழுத்து | பழைய தமிழெழுத்து . |
வட்டை | வழி ; சக்கரத்தின் மேல் வளைமரம் ; தேர் ; வயல் ; பெருங்காடு ; திக்கு ; மலை வட்டைமரம் ; மரவட்டைவகை ; நாட்டுப்பகுதி ; புலியின் உடல்வரி ; அகன்று வட்ட வடிவமாயமைந்த பக்காப்படிவகை . |
வட்புலி | அரிமா . |
வடக்கயிறு | ஏர்நாழிக்கயிறு ; தேர் முதலியவற்றை யிழுக்குங் கயிறு . |
வடக்கிருத்தல் | உயிர்துறக்குந் துணிவுடன் வடக்கு நோக்கியிருந்து உயிர்விடுதலை மேற்கொள்ளுதல் . |
வடக்கு | நான்கு திசையுள் ஒன்று . |
வடக்குநோக்கி | காந்தவூசி . |
வடக்குமலையான் | காண்க : வடமலையான் . |
வடகம் | கறிப்பொருள்களை அரைத்த மாவுடன் சேர்த்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை ; வற்றல் ; மேலாடை ; துகில்வகை ; காண்க : வடகு . |
வடகயிலை | வெள்ளியங்கிரி . |
வடகலை | வடமொழி ; வடமொழிநூல் ; வைணவப் பிரிவினர் ; வடகலை வைணவர் தரிக்குந் திருமண்காப்பு . |
வடகாற்று | வாடை . |
வடகிரி | மேருமலை . |
வடகிழக்கு | வடக்குங் கிழக்குஞ் சேருங் கோணத்திசை . |
வடகீழ்த்திசை | வடக்குங் கிழக்குஞ் சேருங் கோணத்திசை . |
வடகீழ்த்திசைப்பாலன் | ஈசானன் . |
வடகு | தோல் . |
வடகோடு | பிறைச்சந்திரனின் வடக்குமுனை . |
வடசொல் | காண்க : வடமொழி . |
வடதளம் | ஆலிலை . |
வடதிசைப்பாலன் | குபேரன் . |
வடதுருவம் | வடக்கிலுள்ள முனை . |
வடந்தை | வடதிசையில் உள்ளது ; வடகாற்று . |
வடந்தைத்தீ | பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து ஊழி முடிவில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படுந் தீ . |
வடநூல் | வடமொழியிலுள்ள நூல் . |
வடபல்லி | தலைக்கோலத்திற் புல்லகமென்னும் அணிகலன் . |
வடபுலம் | வடநாடு ; உத்தரகுரு . |
வடபூமி | வடநாடு . |
வடபொழில் | வடக்கிலுள்ள நாட்டுப்பகுதி . |
வடம் | கனமான கயிறு ; தாம்பு ; வில்நாண் ; மணிவடம் ; சரம் ; ஒழுங்கு ; ஆலமரம் ; மண்டலம் ; பலகை . |
வடமகீதரம் | காண்க : வடகிரி . |
வடமரம் | ஆலமரம் ; கப்பலின் நடுவிலிருக்கும் பாய்மரம் . |
வடமலை | மேருமலை ; இமயமலை ; திருப்பதிமலை ; மந்தரமலை . |
வடமலையான் | திருப்பதித் திருமால் . |
வடமீன் | அருந்ததி ; துருவமீன் . |
வடமூலகன் | சிவன் . |
வடமேரு | மேருமலை . |
வடமேற்றிசைக்குறி | கழுதை . |
வடமேற்றிசைப்பாலன் | வாயு . |
வடமொழி | சமஸ்கிருதம் . |
வடரம் | தலைச்சீலை ; பாய் . |
வடலி | இளம்பனைமரம் . |
வடவர் | வடநாட்டார் . |
வடவரை | மேருமலை ; மந்தரமலை . |
வடவளம் | வடநாட்டில் விளைந்த பண்டம் . |
வடவனல் | காண்க : வடந்தைத்தீ . |
வடவனலம் | காண்க : வடந்தைத்தீ . |
வடவாக்கினி | காண்க : வடந்தைத்தீ . |
வடவாமுகம் | காண்க : வடந்தைத்தீ . |
வடவாமுகாக்கினி | காண்க : வடந்தைத்தீ . |
வடவானலம் | காண்க : வடந்தைத்தீ . |
வடவு | மெலிவு . |
வடவேங்கடம் | திருப்பதிமலை ; வடமலை . |
வடவை | பெண்குதிரை ; காண்க : வடந்தைத்தீ ; அடிமைப்பெண் ; குதிரைச்சாதிப் பெண் ; எருமை ; பெண்யானை . |
வடவைக்கனல் | காண்க : வடந்தைத்தீ . |
![]() |
![]() |
![]() |