வாட்படை முதல் - வாதலம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வாட்படை வாள் தரித்த வீரர் கூட்டம் .
வாட்படையாள் துர்க்கை .
வாட்போர் வாளால் செய்யும் சண்டை .
வாடகை கூலி ; குடிக்கூலி ; சுற்றுவட்டம் ; தெரு ; வாகனசாலை ; மண்சுவர் .
வாடல் வாடுகை ; வாடினபொருள் ; உலர்ந்த பூ .
வாடாமல்லிகை ஒரு பூச்செடிவகை .
வாடாமாலை பூமாலைபோன்று வாடாததான பொன்னரிமாலை ; கிழி , கிடை முதலியவற்றால் செய்யப்படும் மாலை .
வாடாவஞ்சி சேரர் தலைநகரமான கருவூர் .
வாடாவள்ளி ஒரு கூத்துவகை ; ஓவியம் .
வாடி செடிவகை ; தோட்டம் ; மதில் ; முற்றம் ; வீடு ; மீன் உலர்த்தும் இடம் ; பட்டி ; சாவடி ; அடைப்புள்ள இடம் ; மரம் விற்குமிடம் .
வாடிக்கை வழக்கம் ; வழக்கமாகப் பற்றுவரவு செய்கை ; முறை ; காண்க : வாடிக்கைக்காரன் .
வாடிக்கைக்காரன் வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன் ; பண்டங்களை வழக்கமாக ஓரிடத்து விலைக்கு வாங்குவோன் .
வாடு வாடற்பூ .
வாடுதல் உலர்தல் ; மெலிதல் ; பொலிவழிதல் ; மனமழிதல் ; தோல்வியடைதல் ; கெடுதல் ; நீங்குதல் ; குறைதல் ; நிறைகுறைதல் .
வாடூன் உப்புக்கண்டம் .
வாடை வடகாற்று ; குளிர்காற்று ; காற்று ; மணம் ; காண்க : வடவைத்தீ ; தெருச்சிறகு ; தெரு ; இடையர் அல்லது வேடர் வாழும் வீதி ; சிற்றூர் ; மருந்து ; கூலி .
வாடைக்கச்சான் வடமேல்காற்று .
வாடைக்காற்று வடகாற்று .
வாடைக்கொண்டல் வடகீழ்காற்று .
வாடைப்பாசறை பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை .
வாடைப்பொடி மணத்தூள் ; வசியப்படுத்தும் பொடி .
வாடையாலோடுதல் வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல் .
வாடையிலோடுதல் வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல் .
வாண்மங்கலம் பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை ; வீரனது வாள்வெற்றியால் பசிப்பிணி தீர்ந்த பேய்ச் சுற்றம் அவன் வாளினை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை .
வாண்மண்ணுநிலை நன்னீரில் ஆட்டிய அரசவாளின் வீரம் குறிக்கும் புறத்துறை .
வாண்முகம் வாளின் வாய் .
வாண்முட்டி வாளின் பிடி .
வாணக்கந்தகம் பொறிவாணம் முதலியன செய்தற்குரிய கந்தகவகை .
வாணக்கல் வீடு முதலியவற்றின் அடிப்படைக்கல் .
வாணகம் அம்பு ; தீ ; தனிமை ; பசுவின் மடி ; வேய்ங்குழல் .
வாணகன் திருமால் .
வாணம் அம்பு ; தீ ; மத்தாப்பு முதலியன ; அடிப்படைக் குழி .
வாணம்பறித்தல் அடிப்படை தோண்டுதல் .
வாணன் வாழ்பவன் ; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் ; நல்வாழ்வுள்ளவன் ; ஓரசுரன் ; கார்த்திகைநாள் ; நெல்வகை .
வாணாத்தடி சிலம்பக்கோல் .
வாணாள் வாழ்நாள் ; உயிர் .
வாணாளளப்போன் சூரியன் .
வாணி கலைமகள் ; நாதந்தோன்றுமிடம் ; ஒரு கூத்து ; சொல் ; கல்வி ; சரசுவதிநதி ; அம்பு ; ஓமம் ; நீர் ; இந்துப்பு ; காண்க : மனோசிலை ; ஆடுமாடுகளின் தலைக்கறி .
வாணிகச்சாத்து வாணிகர் கூட்டம் .
வாணிகம் வியாபாரம் ; ஊதியம் .
வாணிகன் வியாபாரி ; வைசியன் ; துலாக்கோல் ; துலாராசி .
வாணிகேள்வன் பிரமன் .
வாணிச்சி காண்க : வாணியச்சி ; வணிகச்சாதிப்பெண் .
வாணிச்சியம் காண்க : வாணியம் .
வாணிதம் கள் .
வாணிதி காண்க : வாணினி .
வாணிபம் காண்க : வாணிகம் .
வாணிமலர் வெண்டாமரை .
வாணிமன் காண்க : வாணிகேள்வன் .
வாணியச்சி செக்கார்சாதிப் பெண் .
வாணியம் காண்க : வாணிகம் .
வாணியன் காண்க : செக்கான் .
வாணினி நாடகக்கணிகை ; நாணமற்றவள் .
வாணீசன் பிரமன் .
வாணுதல் ஒளிபொருந்திய நெற்றி ; ஒள்ளிய நெற்றியுள்ள பெண் .
வாத்தி ஆசிரியன் .
வாத்தியப்பெட்டி ஆர்மோனியப்பெட்டி ; இசையெழுப்பும் இயந்திரப்பெட்டி .
வாத்தியம் இசைக்கருவி .
வாத்தியாயர் ஆசிரியர் .
வாத்தியார் ஆசிரியர் ; புரோகிதன் ; நாடகம் , கூத்து முதலியன பயிற்றுவிப்போன் .
வாத்து தாரா ; பெருந்தாரா ; மரக்கொம்பு ; மனை ; இல்லுறைதெய்வம் .
வாதக்குடைச்சல் சந்துவாதத்தால் உண்டாகும் வலி ; நரம்புநோய்வகை .
வாதகம் இடையூறு .
வாதகேது புழுதி .
வாதசுரம் வாதத்தைப்பற்றியெழுந்த காய்ச்சல் .
வாதசெபம் வாயுவேகம் .
வாதநாசனம் காண்க : ஆமணக்கு .
வாதநாடி நாடி மூன்றனுள் வாதநிலையை அறிவிக்கும் நாடி .
வாதநீர் உடலில் திமிர் உண்டாக்கும் கெட்ட நீர் .
வாதநோய் உடலுறுப்புகளில் வலியை உண்டுபண்ணும் நோய்வகை .
வாதப்பிடிப்பு வாயுப்பிடிப்பு .
வாதபாடணர் கோட்சொல்பவர் .
வாதம் உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு ; காண்க : வாதநோய் ; வாதநாடி ; பத்துவகை வாயு ; காற்று ; சொல் ; வாதம் முதலியவற்றால் ஒரு பக்கத்தை எடுத்துக்கூறுகை ; தருக்கம் ; உரையாடல் இரசவாதவித்தை ; வில்வமரம் .
வாதமடக்கி வாதநோய் போக்கும் மருந்துமரவகை ; செடிவகை .
வாதலம் செடிவகை .