இசைகடன் முதல் - இட்டளப்படுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இசைவுகுவைவு பொருத்தமின்மை ; காரியத் தவறு .
இசைவுகேடு பொருத்தமின்மை ; காரியத் தவறு .
இசைவுதீட்டு உடன்படிக்கைப் பத்திரம் .
இசைவுபிறழ்வு ஒழுங்கின்மை ; இசைவுகேடு .
இஞ்சக்கம் பரிதானம் , கையூட்டு , இலஞ்சம் .
இஞ்சம் வெண்காந்தள் .
இஞ்சாகம் இறால்மீன் .
இஞ்சி கோட்டை ; பூடுவகை ; கொற்றான் .
இஞ்சிச்சுரகம் இஞ்சிச் சாற்றாலாய கழாயம் .
இஞ்சித்தேறு இங்சித்துண்டு .
இஞ்சிப்பாகு இஞ்சி இளகவகை .
இஞ்சிப்பாவை இஞ்சிக்கிழங்கு .
இஞ்சிமாங்காய் இஞ்சிவகை .
இஞ்சிவேர்ப்புல் காண்க : சுக்குநாறிப்புல் .
இஞ்சுசாரை வெல்லம் .
இஞ்சுதல் சுவறுதல் ; சுண்டுதல் ; இறுகுதல் ; வற்றுதல் .
இஞ்சை துன்பம் ; கொலை .
இட்டகந்தம் நறுமணம் .
இட்டகாமியம் மனம் மிக விரும்பியது ; விரும்பியதைப் பெறும்பொருட்டுச் செய்யும் செயல் .
இட்டங்கட்டுதல் இராசிநிலை வரைதல் .
இட்டசட்டம் தன்னிச்சை .
இட்டசித்தி விரும்பியதை அடைகை .
இட்டடுக்கி காதணிவகை .
இட்டடை இட்டிடை ; துன்பம் .
இட்டடைச்சொல் தீச்சொல் .
இட்டதெய்வம் வழிபடு கடவுள் .
இட்டதேவதை வழிபடு கடவுள் .
இட்டபோகம் விரும்பினபடி நுகர்தல் .
இட்டம் விருப்பம் ; அன்பு ; நட்பு ; கோள் நிலையாலாகும் பலாபலன் ; துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு ; யாகம் ; யோகம் .
இட்டம்பண்ணுதல் அடிமைத்தனத்தை விலக்குதல் .
இட்டலி சிற்றுண்டிவகை .
இட்டலிக்கொப்பரை இட்டலி அவிக்கும் பாத்திரம் .
இட்டலிங்கம் மாணவனுக்கு ஆசிரியனால் கொடுக்கப்படும் அன்றாட வழிபாட்டிற்குரிய ஆன்மார்த்த லிங்கம் .
இட்டவழக்கு சொன்னது சட்டமாயிருக்கை .
இட்டவை வழி .
இட்டளப்படுதல் சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல் .
இசைகடன் நேர்த்திக்கடன் .
இசைகாரர் பாடுவோர் ; பாணர் .
இசைகுடிமானம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கலியாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம் .
இசைகேடு இகழ் ; இசைபாடுதலில் தவறு ; சீர் கெட்ட நிலை ; எக்கச்சக்கம் ; தவறான நிலை ; ஒழுங்கின்மை ; பொருத்தமின்மை ; கெடுதி .
இசைச்சுவை குரல் முதலிய ஏழிசைக்குரிய சுவைகள் : பால் , தேன் ; கிழான் , நெய் , ஏலம் , வாழை , மாதுளங்கனி .
இசைத்தமிழ் முத்தமிழுள் ஒன்று .
இசைத்தல் யாழ் முதலியன ஒலித்தல் ; சொல்லுதல் ; அறிவித்தல் ; உண்டுபண்ணுதல் ; கட்டுதல் ; ஒத்தல் ; மிகக் கொடுத்தல் ; புணர்தல் .
இசைதல் பொருந்துதல் ; ஒத்துச்சேர்த்தல் ; உடன்படுதல் ; கிடைத்தல் ; இயலுதல் .
இசைநாள் உத்திரட்டாதி ; பூரட்டாதி .
இசைநிறை செய்யுளில் இசை நிறைத்தற்கு வருஞ் சொல் ; அவை : ஒடு ; தெய்ய முதலியன .
இசைநிறையசைச்சொல் செய்யுளோசை நிறைத்தற்பொருட்டு வரும் அசைச்சொற்கள் ; அவை : ஏ , ஓ , உம் , அம்ம , அரோ , குரை என்பன .
இசைநூபுரம் வீரன் அணியும் கழல் .
இசைநூல் இசைக்கலை .
இசைப்பா இசையோடு சேர்ந்த பாக்களில் ஒருவகை ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா ஒழிந்த ஏனையவை ; திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை) .
இசைப்பாட்டு பண்ணுடன் பாடும் பாட்டு .
இசைப்பாடு கீர்த்தி மிகுதி .
இசைப்பாணர் பாணருள் ஒருவகையார் .
இசைப்பு சொல் ; யாழ் முதலியன வாசிக்கை ; இசைவு ; பொருத்துகை .
இசைப்புள் அன்றிற்பறவை ; குயில் .
இசைப்பொறி செவி .
இசைபேதம் காண்க : இசைகேடு .
இசைமகள் கலைமகள் .
இசைமடந்தை கலைமகள் .
இசைமணி வீரகண்டை .
இசைமறை சாமவேதம் .
இசைமுட்டி காண்க : செருந்தி .
இசைமூடி கிரந்திநாயகம் என்னும் செடி .
இசைமை புகழ் ; ஒலி .
இசையறிபறவை காண்க : அசுணம் .
இசையறுத்தல் ஓசை வேறுபடப் பிரித்தல் .
இசையின்செல்வி புகழமகள் .
இசையெச்சம் வாக்கியத்தில் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது .
இசையெடுத்தல் பாடுதல் .
இசையோர் கந்தருவர் .
இசையோலை ஒப்பந்த ஒலை .
இசையோன் இசைகாரன் .
இசைவல்லோர் கந்தருவர் ; பாடகர் .
இசைவாணர் இசைவல்லோர் ; பாடகர் .
இசைவு பொருந்துகை ; தகுதி ; உடன்பாடு ; ஏற்றது ; ஓட்டம் .