இட்டளம் முதல் - இடத்தை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இட்டுப்பிரித்தல் அண்மையில் தலைவன் பிரிதல் .
இட்டுப்பிரிவு அண்மை இடத்தில் தலைவன் பிரியும் பிரிவு .
இடடுப்பிறத்தல் ஒரு செயலுக்காகப் பிறத்தல் .
இட்டுரைத்தல் சிறப்பித்துச் சொல்லுதல் .
இட்டுவட்டி அன்னவட்டி .
இட்டுவருதல் அழைத்து வருதல் ; கொடுத்து விட்டு வருதல் .
இட்டுறுதி கண்டிப்பு ; ஆபத்துக்கால உதவி .
இட்டேற்றம் பொய்யாகச் குற்றஞ் சாட்டுகை ; கொடுமை .
இட்டேறி வயல்களின் இடையே செல்லும் வரப்புப் பாதை ; வண்டிப் பாதை .
இட்டேறுதல் கூடியதாதல் ; போதியதாதல் .
இட்டோடு ஒற்றுமையின்மை .
இடக்கயம் கொடி .
இடக்கர் அவையில் சொல்லத்தகாத சொல் ; குடம் ; மீதூர்கை .
இடக்கரடக்கல் பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று .
இடக்கரடக்கு பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று .
இடக்கரிசை செய்யுட் குற்றத்துள் ஒன்று .
இடக்கல் தோண்டுதல் ; அகழ்தல் .
இடக்கன் தாறுமாறு செய்பவன் .
இடக்கியம் தேர்க்கொடி .
இடக்கு சொல்லத்தகாத சொல் ; வீண்வாதம் ; முரண்செயல் .
இடக்குதல் விழுதல் .
இடக்குமடக்கு தாறுமாறு ; தொல்லை .
இடக்குமுடக்கு தாறுமாறு ; தொல்லை .
இடக்கை இடப்பக்கத்திலுள்ள கை ; இடக்கையால் கொட்டும் ஒரு தோற்கருவி ; பெருமுரசுவகை .
இடகண் இடப்பக்கத்தவன் .
இடகலை காண்க : இடகலை .
இடங்கசாலை அக்கசாலை .
இடங்கட்டுக்கொம்பு மாட்டுக்குற்றவகை .
இடங்கணம் வெண்காரம் .
இடங்கணி சங்கிலி ; காண்க : இடங்கணிப்பொறி ; உளி .
இடங்கணிப்பொறி கோட்டை மதிலில் வைக்கப்படும் இயந்திரங்களுள் ஒன்று .
இடங்கம் உளி ; இரத்தினம் நிறுக்கப் பயன்படுவதும் 24 இரத்தி கொண்டதுமான நிறைகல் ; மண்தோண்டும் படை ; வாளினுறை ; கணைக்கால் ; பொரிகாரம் ; கோபம் ; செருக்கு ; கற்சாணை .
இடங்கர் கயவர் ; முதலைவகை ; நீர்ச்சால் ; குடம் ; சிறுவழி .
இடங்கரம் மகளிர் சூதகத்தால் உண்டாகும் தீட்டு .
இடங்கழி எல்லை கடக்கை ; காமமிகுதி ; மீதூர்கை ; மரப்பாத்திரம் ; இராகவேகம் ; ஒருபடியளவு .
இடங்கழியர் காமுகர் ; கயவர் .
இடங்காரம் மத்தளத்தின் இடப்பக்கம் ; வில்லின் நாணோசை .
இடங்கெட்டவன் அலைபவன் ; தீயன் .
இடங்கேடு வறுமை ; தாறுமாறு ; நாடு கடத்துகை ; எக்கச்சக்கம் .
இடங்கை இடக்கை .
இடங்கொடுத்தல் கண்டிப்பின்றி நடக்கவிடுதல் ; பிடிகொடுத்தல் .
இடங்கொள்ளுதல் பரவுதல் ; இடம்பற்றுதல் ; வாழுமிடமாகக் கொள்ளுதல் .
இடங்கோலுதல் ஊன்ற இடஞ்செய்துகொள்ளுதல் ; ஆயத்தம் பண்ணுதல் .
இடச்சுற்று இடப்புறமாகச் செல்லும் வளைவு ; இடஞ்செல்லுகை .
இடசாரி இடப்பக்கமாக வரும் நடை .
இடஞ்சுழி இடப்பக்கம் நோக்கியிருக்கும் சுழி .
இடத்தகைவு எதிர்வழக்காடுவோனைக் குறிப்பிட்ட இடம்விட்டுப் போகாமல் வழக்காடுவோன் அரசாணை சொல்லித் தடுக்கை .
இடத்தல் பிளவுபடுதல் ; உரிதல் ; தோண்டுதல் ; பிளத்தல் ; பெயர்த்தல் ; குத்தியெடுத்தல் ; உரித்தல் .
இடத்துமாடு நுகத்தின் இடப்பக்கத்தில் பூட்டப்படும் மாடு .
இடத்தை நுகத்தின் இடப்பக்கத்தில் பூட்டப்படும் மாடு .
இட்டளம் நெருக்கம் ; வருத்தம் ; தளர்வு ; பொன் .
இட்டளர் மனவருத்தமுள்ளவர் .
இட்டறுதி குறித்த எல்லை ; இக்கட்டான நிலை ; வறுமை .
இட்டறை யானையை வீழ்த்தும் குழி .
இட்டன் விருப்பமானவன் ; நண்பன் ; தலைவன் .
இட்டாதெய்வம் காண்க : இட்டதெய்வம் .
இட்டி ஈட்டி ; வேள்வி ; சங்கிரகச் செய்யுள் ; கொடை ; பூசை ; இச்சை ; செங்கல் .
இட்டிகை செங்கல் ; இடுக்குவழி ; கூட்டுமெழுகு .
இட்டிகைவாய்ச்சி செங்கற்களை செதுக்கும் கருவி .
இட்டிடை சிறுகிய இடை ; அற்பம் ; இடையூறு ; கடைசற் கருவியின் ஓருறுப்பு .
இட்டிடைஞ்சல் துன்பம் ; வறுமை .
இட்டிது சிறிது ; அண்மை .
இட்டிமை சிறுமை ; ஒடுக்கம் .
இட்டிய சிறிய .
இட்டியம் யாக சம்பந்தம் ; வேள்வி .
இட்டீடு விவாதம் .
இட்டீடுகொள்ளுதல் வார்த்தையிட்டு வார்த்தை கொள்ளுதல் .
இட்டீறு செருக்கால் செய்யும் செயல் .
இட்டு தொடங்கி ; காரணமாக ; ஓர் அசை ; சிறுமை .
இட்டுக்கட்டிப் பேசுதல் இல்லாததைக் கற்பித்துப் பேசுதல் .
இட்டுக்கட்டுதல் இல்லாததை ஏற்றிச் சொல்லுதல் ; கற்பனை செய்தல் .
இட்டுக்கொடுத்தல் ஏற்றிக் கொடுத்தல் ; புலாலுணவு படைத்தல் .
இட்டுக்கொண்டுபோதல் கூட்டிக்கொண்டு செல்லுதல் .
இட்டுக்கொண்டுவருதல் உடன் அழைத்து வருதல் .
இட்டுநீர் தாரை வார்க்கும் நீர் .