இடது முதல் - இடார் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இடறல் கால் தடுக்குகை ; தடை ; பழி ; தண்டனை .
இடறு தடை ; துன்பம் .
இடறுகட்டை தடையாயிருப்பது .
இடறுதல் கால் தடுக்குதல் ; துன்பப்படுதல் ; மீறுதல் ; ஊறுபடுத்துதல் ; தடுத்தல் .
இடன் அகலம் ; நல்ல நேரம் ; இடப்பக்கம் இருப்பவன் .
இடனறிதல் அரசன் வினை செய்தற்குரிய இடத்தைத் தெரிதல் .
இடனெறிந்தொழுகல் வணிகர் குணங்களுள் ஒன்று ; இருக்கும் இடம் நோக்கி அதற்கிசைய நடத்தல் .
இடா இறைகூடை ; ஓர் அளவு .
இடாகினி காளியேவல் செய்வோள் ; சுடுகாட்டில் பிணங்களைத் தினனும் பேய் .
இடாகு புள்ளி ; குறி .
இடாகுபோடுதல் கால்நடைகளுக்குச் சூடு போடுதல் .
இடாசுதல் நெருக்குதல் ; மோதுதல் ; மேற்படுதல் ; இகழ்தல் .
இடாடிமம் காண்க : தாதுமாதுளை .
இடாதனம் யோகாசனவகை .
இடாப்பு அட்டவணை .
இடாப்புதல் காலை அகலவைத்தல் .
இடாம்பிகன் பகட்டுக்காரன் .
இடாமிடம் ஒழுங்கற்ற பேச்சு .
இடாமுடாங்கு ஒழுங்கின்மை .
இடாயம் இசைத்துறை ஐந்தனுள் ஒன்று .
இடார் இறைகூடை ; எலிப்பொறி .
இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதல் .
இடநாகம் அடைகாக்கும் நல்லபாம்பு .
இடநாள் உரோகிணி , மகம் , விசாகம் , திருவோணம் முதலாக மும்மூன்று நட்சத்திரங்கள் .
இடநிலைப்பாலை பண்வகை .
இடப்படி ஓர் அடிவைப்பு .
இடப்பு பெயர்த்த மண்கட்டி ; பிளப்பு .
இடப்புக்கால் அகலவைத்த கால் .
இடப்பெயர் இடத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் .
இடப்பொருள் ஏழாம் வேற்றுமைப்பொருள் .
இடபக்கொடியோன் காளைக் கொடியையுடைய சிவன் .
இடபகிரி அழகர்மலை .
இடபதீபம் கோயில் மூர்த்தியின் முன்பு எடுக்கும் அலங்கார தீபவகை .
இடபம் ஏறு ; பொலிகாளை ; நந்தி ; இரண்டாம் இராசி ; வைகாசி ; மதயானை ; முக்கியப் பொருள் ; ஏழு சுரத்துளொன்று ; செவித்துறை ; ஒரு பூண்டு .
இடபவாகனன் சிவன் .
இடபவீதி மீனம் , மேடம் , கன்னி , துலாம் என்னும் இராசிகளடங்கிய சூரியன் இயங்கும் நெறி .
இடபன் இடபசாதி மானுடன் ; உருத்திரர்களுள் ஒருவர் .
இடபி பூனைக்காலி ; ஆண்வடிவப் பெண் ; கைம்மை .
இடம் தானம் ; வாய்ப்பு ; வீடு ; காரணம் ; வானம் ; விரிவு ; இடப்பக்கம் ; அளவு ; ஆடையின் அகலமுழம் ; பொழுது ; ஏற்ற சமயம் ; செல்வம் ; வலிமை ; மூவகையிடம் ; படுக்கை ; தூரம் ; ஏழனுருபு ; இராசி .
இடம்பகம் பேய் .
இடம்படுதல் விரிவாதல் ; பரந்து இருத்தல் ; மிகுதியாதல் .
இடம்பண்ணுதல் பூசை , உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைத் தூய்மைசெய்தல் .
இடம்பம் பகட்டு ; தற்பெருமை .
இடம்பாடு விரிவு ; பருமை ; செல்வம் .
இடம்பார்த்தல் இடந்தேடுதல் ; சமயமறிதல் .
இடம்புதல் ஒதுங்குதல் , விலகுதல் .
இடம்புரி இடப்புறம் சுழியுள்ள சங்கு ; இடப்பக்கம் திரிந்த கயிறு ; பூடுவகை .
இடம்பூணி காண்க : இடத்துமாடு .
இடம்பெறவிருத்தல் ஓலக்கமிருத்தல் .
இடமயக்கம் ஒரு திணைக்குரிய உரிப் பொருளைப் பிறிதொரு திணைக்குரியதாகக் கூறும் இடமலைவு .
இடமலைவு ஓரிடத்துப் பொருளை மற்றோரிடத்திலுள்ளதாகச் சொல்லும் வழு .
இடமற்ற பிள்ளை நற்பேறற்ற பிள்ளை .
இடமானம் பரப்பு ; மாளிகை ; பறைவகை .
இடமிடைஞ்சல் நெருக்கடி .
இடமுடங்கு நெருக்கடி .
இடர் துன்பம் , வருத்தம் ; வறுமை .
இடர்ப்படுதல் வருத்தமுறுதல் ; நலிந்துகொள்ளுதல் .
இடர்ப்பாடு இடர்ப்படுதல் ; துன்புறுகை .
இடர்ப்பில்லம் கண்நோய்வகை .
இடரெட்டு நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை ; விட்டில் ; கிளி ; யானை ; வேற்றரசு ; தன்னரசு ; இழப்பு , பெரும் வெயில் , காற்று இவற்றால் வருவது .
இடலம் விரிவு , அகலம் .
இடலை மரவகை ; துன்பம் .
இடவகம் மா பனைகளின் பிசின் ; இலவங்கம் .
இடவகை வீடு , இல்லம் .
இடவயின் இடத்து .
இடவழு தன்மை முதலிய மூவகையிடங்களைப் பிறழக் கூறுகை .
இடவன் மண்ணாங்கட்டி ; நுகத்தின் இடப்பக்கத்து மாடு ; கூட்டெருது ; பிளக்கப்பட்ட பொருள் .
இடவாகுபெயர் இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆவது .
இடவிய பரந்துள்ள ; வேகமாக ; சார்ந்த .
இடவியது அகலமுள்ளது ; விரைவுள்ளது .
இடவை வழி ; பாதை .
இடவோட்டம் இராகுகேதுக்களின் இடப்பக்கமாகச் செல்லும் போக்கு .
இடவோட்டு நாள் காண்க : இடநாள் .
இடற்சம் செம்போத்து .
இடது இடப்புறமான .