கு முதல் - குசக்கணக்கு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குசக்கணக்கு தவறான கணக்கு ; குயவரில் கணக்குப் பார்க்கும் ஒருவகையினர் .
குச்சை கொய்சகம் .
குக்குலி செம்போத்து .
குக்குலு குங்கிலியம் .
குக்குலுவம் குங்கிலியம்
குக்குறுவான் ஒரு பறவை வகை .
குக்கூடல் முட்டாக்கு .
குக்கூவெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
குகம் மலைக்குகை ; வேகமான நடையுள்ள குதிரை ; நுட்பம் ; மறைவு .
குகரம் மலைக்குகை ; சுரங்கம் .
குகரர் சாவகத்தீவில் வாழும் ஒரு சாதியார் .
குகலிதம் ஒலி ; குயிலின் குரல் .
குகன் முருகன் ; இராமரிடம் நட்புக்கொண்ட ஒரு வேடன் ; குரு .
குகாரணி உமை .
குகீலம் மலை .
குகு அமாவாசை ; பத்து நாடியுள் ஒன்று ; கூகையொலி .
குகுரன் காண்க : குக்கன் .
குகுலா கடுகுரோகிணி ; தேனீ .
குகூகம் குயில் .
குகை மலையில் விலங்குகள் தங்கும் இடம் ; முனிவர் வாழிடம் ; சிமிழ் உலோகங்களை உருக்கும் பாத்திரம் ; கல்லறை .
குகைக்காமன் கல்நார் .
குகைச்சி கறையான் புற்று .
குகைப்புடம் மூசையில் வைத்து இடும் புடம் .
குகைமேனாதத்தீ சுவர்ணபேதி .
குங்கிலிகம் குங்கிலியம் ; வாலுளுவையரிசி .
குங்கிலியம் ஒருவகை மரம் , சாலமரம் ; வெள்ளைக் குங்கிலியம் ; கருங்குங்குலியம் ; மலைக்கிளுவை .
குங்கிகுலியம் ஒருவகை மரம் , சாலமரம் ; வெள்ளைக் குங்கிலியம் ; கருங்குங்குலியம் ; மலைக்கிளுவை .
குங்குதல் குன்றுதல் , குறைதல் .
குங்குமக்காவி செங்காவி .
குங்குமச்சம்பா மஞ்சள் நிறமுள்ள சம்பா நெல்வகை .
குங்குமச்செப்பு குங்குமம் வைக்கும் சிமிழ் .
குங்குமச்சோரன் குதிரையில் ஒருவகை .
குங்குமப்பரணி குங்குமம் வைக்கும் சிமிழ் .
குங்குமப்பூ குங்குமமரத்தின் பூ .
குங்குமப் பொட்டு குங்குமப் பொடியால் நெற்றியிலிடும் திலகம் .
குங்குமம் செடிவகை ; மஞ்சளிலிருந்து செய்யும் மகளிர் செம்பொடி ; குரங்கு மஞசள் நாறி ; செஞ்சாந்து ; நெற்றியிலிடும் குங்குமப் பொடி ; குங்குமப்பூ .
குங்குமவர்ணி மஞ்சட் கல் ; அரிதாரம் .
குங்குமவலரி செவ்வலரிச்செடி .
குங்குலு ஒருவகை நீண்டமரம் ; குங்கிலிய மரம் .
குச்சத்தின் பாதி சிறுபுள்ளடிப் பூண்டு .
குச்சம் கொத்து ; ஒருவகை அலங்காரக்குஞ்சம் ; நெற்குஞ்சம் ; பற்பாடகம் ; குன்றி மணி ; நாணல் ; புறந்தூற்றுமொழி .
குச்சரம் கூர்ச்சர நாடு .
குச்சரி ஒரு பண்வகை ; முற்காலத்திலே வழங்கிய துகில்வகை .
குச்சரித்தல் அருவருப்புக் கொள்ளுதல் .
குச்சி மரக்குச்சி ; கொண்டையூசி ; ஒருவகைச்செடி ; முகடு .
குச்சிகை வீணைவகை .
குச்சித்தல் அருவருத்தல் .
குச்சிதம் இழிவு .
குச்சிப்புல் ஒருவகைப் புல் .
குச்சில் சிறு வீடு ; காண்க : குச்சுப்புல் .
குச்சிலியர் கூர்ச்சரர் .
குச்சு மரக்குச்சு ; கடாவுமுளை ; கொண்டையூசி ; சிறுகுடில் ; சிற்றறை ; குஞ்சம் ; குச்சுப்புல் ; ஒரு காதணி ; கழுத்தணிவகை ; சீலையின் முன்மடி ; பாவாற்றி என்னும் நெசவுக் கருவி .
குச்சுக்கெம்பு புறவிடம் மேடான சிவப்பு மணி .
குச்சுப்பிடித்தல் ஆடையைக் கொய்து வைத்தல் ; குஞ்சம் வைத்தல் .
குச்சுப்புல் ஒருவகைப் புல் , கொத்தாயுள்ள புல் .
குச்சுமட்டை ஓவியரின் கருவிவகை ; வெள்ளையடித்தற்குதவும் மட்டை .
குச்செறிதல் மயிர்சிலிர்த்தல் .
குக்குரி பெண்நாய் .
கு ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+உ) ; நான்கனுருபு ; ஒரு சாரியை ; பண்புபெயர் விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று விகுதி ; வடமொழியில் இன்மைக்கும் எதிர்மறைக்கும் வரும் ஒரு முன்னொட்டு ; பூமி .
குக்கர் மிக இழிந்தோர் .
குக்கல் கக்குவான் நோய் ; நாய் .
குக்கன் நாய் .
குக்கி வயிறு .
குக்கில் செம்போத்து ; குங்கிலியம் ; குங்கிலியப்பிசின் .
குக்கிலம் அதிவிடயப்பூண்டு .
குக்குடச்சூட்டு கோழித்தலைக் கந்தகம் .
குக்குடசர்ப்பம் ஆயுள் நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்கும் அளவு பறந்து செல்லும் தன்மையதான பாம்பு .
குக்குடதீபம் கோழி வடிவாக உள்ள கோயில் விளக்கு .
குக்குடபுடம் கோழிப்புடம் , கோழியின் அளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம் .
குக்குடம் கோழி ; குக்குடசர்ப்பம் .
குக்குடாசனம் இரு பாதங்களையும் கீழ் வைத்துக் கோழிபோல் குந்தியிருந்து யோகம் செய்யும் இருக்கைவகை .
குக்குடி பெட்டைக்கோழி ; இலவமரம் .
குக்குதல் இருமுதல் ; குந்துதல் .
குக்குரம் கோடகச்சாலைப் பூடு .
குக்குரன் காண்க : குக்கன் .