முதல் - பகண்டை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ) ; இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி ; பஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து .
பஃதி பகுப்பு ; வேறுபாடு ; திறை ; வருவாய் ; தாளிகையின் வரிசை எண் .
பஃது பத்து .
பஃபத்து நூறு .
பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா பல தாழிசைகளோடு மற்றையுறுப்புகளையும் பெற்றுவரும் கொச்சகக் கலிப்பாவகை .
பஃறி ஓடம் ; மரக்கலம் ; இரேவதிநாள் .
பஃறியர் நெய்தல்நில மக்கள் .
பஃறொடை நான்கடியின் மிக்குவரும் வெண்பா .
பஃறொடைவெண்பா நான்கடியின் மிக்குவரும் வெண்பா .
பக்கக்கால் உத்திரத்தின்மேல் வைக்கப்படும் பக்கக் குத்துக்கால் ; பக்கத்துணை .
பக்ககன் கூட்டாளி .
பக்கச்சுவர் கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் எழுப்பப்படுஞ் சுவர் .
பக்கச்சொல் பக்கத்திலிருப்பவர்கள் சொல்லும் சொல் ; துணைச்சொல் ; தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள் .
பக்கச்சொல்லாளி துணைநின்று பேசுவோன் .
பக்கசூலை சூலைநோய் ; துன்பம் .
பக்கஞ்செய்தல் ஒளிவிடுதல் .
பக்கடுத்தல் நொறுங்குதல் .
பக்கணம் ஊர் ; வேடர்வீதி ; அயல்நாட்டுப்பண்டம் விற்கும் இடம் ; சிற்றுண்டி ; தின்பண்டம் .
பக்கத்தார் அயலார் ; நாட்டவர் ; அடுத்தவர் ; கட்சிக்காரர் .
பக்கத்துணை பக்க உதவி .
பக்கத்துமீட்சி யாண்டுத் தீயில்லை ஆண்டுப் புகையுமில்லை என்பதுபோல் துணிபொருள் ஏதுவின் மறுதலையுரை .
பக்கதன்மம் துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை .
பக்கப்பருத்தல் மிகப் பருத்தல் .
பக்கப்பாட்டு துணைப்பாட்டு .
பக்கப்பிளவை முதுகந்தண்டருகில் விலாப்பக்கத்தில் வரும் பிளவைக்கட்டி .
பக்கப்போலி தருக்கத்தில் பக்கத்தின் ஆபாசம் .
பக்கம் அருகு ; இடம் ; பாரிசம் ; நாடு ; வீடு ; விலாப்புறம் ; வால் ; அரசுவா ; சிறகு ; அம்பிறகு ; நட்பு ; அன்பு ; சுற்றம் ; கொடிவழி , வமிசம் ; சேனை ; பதினைந்து திதிகொண்ட காலம் ; திதி ; கூறு ; நூலின் பக்கம் ; கோட்பாடு ; அவமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்பு உடைத்து என்றதுபோன்ற உறுதிசெய் வசனம் ; துணிபொருள் உள்ளவிடம் ; தன்மை ; கையணி ; ஒளி ; நரை ; உணவு .
பக்கம்படுதல் ஒருசார்பு பற்றியிருத்தல் .
பக்கர் இனத்தார் .
பக்கரசம் தேன் .
பக்கரை அங்கவடி ; சேணம் ; துணிப்பை .
பக்கல் பக்கம் ; இனம் ; நாள் .
பக்கவழி சுற்றுவழி ; குறுக்குவழி .
பக்கவாட்டு பக்கங்களிற் சார்ந்துள்ளது ; நேர்சம்பந்தமற்றது .
பக்கவாத்தியம் வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக்கருவிகள் .
பக்கவாதம் ஒருதலைப்பக்கமாகப் பேசுதல் ; கைகால்களை அசைவற்றதாகச் செய்யும் நோய் .
பக்கவாயு கல்ல¦ரலின் நோய்வகை ; அண்டவாயு ; பக்கவாதம் .
பக்கவெட்டுப்போடுதல் கூச்சங்காட்டுதல் .
பக்கவேர் பக்கத்திற் செல்லும் வேர் .
பக்கறை துணியுறை ; குழப்பம் ; பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை ; பை .
பக்காத்திருடன் பேர்போன திருடன் .
பக்கி பறவை ; ஒன்றும் ஈயாதவன் ; குதிரை வண்டி .
பக்கிசைத்தல் ஒலி விட்டிசைத்தல் ; வேறுபடுத்திக் கூறுதல் .
பக்கிடுதல் வெடித்தல் ; வடுப்படுதல் ; திடுக்கிடுதல் .
பக்கிணி ஓர் இரவும் அதற்கு முன்பின்னுள்ள இருபகல்களும் .
பக்கிராசன் பறவைகளுக்கு அரசனான கருடன் .
பக்கிரி முகமதியப் பரதேசி ; பிச்சைக்காரன் .
பக்கு பிளவு ; கவர்படுகை ; பை ; மரப்பட்டை ; புண்ணின் அசறு ; பற்பற்று ; பொருக்கு .
பக்குப்பக்கெனல் அச்சக்குறிப்பு ; மிகுதிக்குறிப்பு ; திடீரென்று எழும் ஒலிக்குறிப்பு ; வெடிக்கச் சிரித்தற்குறிப்பு ; அடுத்தடுத்து உண்டாகும் ஒலிக்குறிப்பு .
பக்குவகாலம் தகுதியான காலம் ; பெண் பூப்படையுங்காலம் .
பக்குவசாலி தகுதியுள்ளவன் ; ஆன்மபக்குவம் உள்ளவன் .
பக்குவஞ்சொல்லுதல் மன்னிப்புக் கேட்டல் ; செய்வகை கேட்டல் .
பக்குவப்படுதல் பூப்படைதல் ; தகுதியாதல் ; ஆன்மபரிபாகம் அடைதல் .
பக்குவம் தகுதி ; முதிர்ச்சி ; ஆத்துமபரிபாகம் ; ஆற்றல் ; மன்னிப்பு ; பூப்படைகை .
பக்குவமாதல் காண்க : பக்குவப்படுதல் .
பக்குவர் கருமகாண்டிகர் , ஞானகாண்டிகர் , பக்திகாண்டிகர் எனப்படும் வைதிக ஒழுக்கத்தவர் ; மருத்துவர் .
பக்குவன் தகுதியுள்ளோன் .
பக்குவாசயம் இரைப்பை .
பக்குவி தகுதியுடையவன்(ள்) ; பூப்படைந்தவள் .
பக்குவிடுதல் பிளத்தல் ; தோலறுதல் .
பக்கெனல் சிரிப்பின் ஒலிக்குறிப்பு ; அச்சம் ; வியப்பு முதலியவற்றின் குறிப்பு ; வெடித்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
பக்தன் தெய்வபக்தியுள்ளவன் .
பக்தாதாயம் நெல்வருவாய் .
பக்தி கடவுள் , குரு முதலியோரிடத்து வைக்கும் அன்பு ; வழிபாடு .
பகட்டன் ஆடம்பரக்காரன் .
பகட்டு ஆடம்பரம் ; தற்பெருமை ; ஒளி ; கவர்ச்சி ; ஏமாற்று ; அதட்டு .
பகட்டுதல் வெளிமினுக்குதல் ; வேடங்காட்டுதல் ; ஆடம்பரங்காட்டுதல் ; வெருட்டுதல் ; தற்புகழ்ச்சி செய்தல் ; அருவருத்தல் ; பொலிவுபெறுதல் ; மயங்குதல் ; வஞ்சித்தல் ; கண்மயங்கப் பண்ணுதல் ; அதட்டுதல் .
பகட்டுமுல்லை முயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழுகின்ற எருதுடன் உவமிக்கும் புறத்துறை .
பகடக்காரன் எத்தன் ; வீண் ஆரவாரக்காரன் ; சூழ்ச்சிக்காரன் .
பகடம் தற்பெருமை ; அதட்டு ; நிறங்கொடுக்கை ; சிலம்பம் ; வெளிவேடம் .
பகடி பரிகாசம் ; விகடம் ; சிரிப்பு உண்டாக்குபவன் ; வெளிவேடக்காரன் ; கூத்தாடி ; கூத்துவகை ; வினை .
பகடு பெருமை ; பரப்பு ; வலிமை ; எருது ; எருமைக்கடா ; ஏர் ; ஆண்யானை ; தெப்பம் ; ஓடம் ; சந்து .
பகடை சூதின் தாயத்தில் ஒன்று ; எதிர்பாராத நற்பேறு ; சக்கிலியச் சாதிப்பெயர் .
பகடையடித்தல் இடம்பச் சொல் சொல்லுதல் .
பகண்டை கவுதாரிவகை ; சிவற்பறவை ; விகடப்பாடல் ; நறையால் என்னும் பூடுவகை .