நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது சயன திருக்கோலத்தில்
இருக்கும் இப்பெருமான் பார்ப்பதற்கு மிகவும் பேரழகு
வாய்ந்தவர். செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு
மிக்கவர் இந்தப் பெருமாள்.
இப்பெருமானைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவர்.
ராஜ்யாதிபத்தியத்திற்கான (அரசு பதவி சம்பந்தமான)
வேண்டுதல்கள் இப்பெருமானை வேண்டியவர்கட்கு
சித்திக்கிறதென்பது ஐதீஹம். தலைப்பில் கொடுத்துள்ள பாவினில்
திருமங்கையும் இதைக்கோடிட்டு காட்டுகிறார்.
திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர்
ஸ்ரீரங்கத்து ரெங்கநாதனாவார். அதனாற்றான் அரங்கனைப்போல
(ஆதிசேடன் மேல் சயனித்து) பேரழகு வாய்ந்தவராகக்
காணப்படுகிறார். “திருத்தெற்றியம்பலத்தென் செங்கண்மாலை”
என்று மங்களாசாசனம் இருப்பினும் பள்ளிகொண்ட பெருமாள்
என்பதே இங்கு பிரபலம்.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்.
இவரும் கருடசேவைக்கு திருநாங்கூர் வருவார்.