2.6 தொகுப்புரை
இப்பாடப் பகுதியில் சிலப்பதிகாரம் என்ற ஒரு மிகச்சிறந்த
தமிழ்க் காப்பியத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். தமிழில்
தோன்றிய முதல் காப்பியம் என்பது மட்டுமன்றி முதன்மைக்
காப்பியமாகவும் திகழ்வது சிலப்பதிகாரமே. வெர்ஜில் எழுதிய
ஏனியட் என்ற ரோமானியக் காப்பியத்துடன் கலைத்
தன்மையில் கருத்தியல் அடிப்படையில் ஒப்புநோக்கத்தக்கது
சிலம்பு. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை
உருத்துவந்து ஊட்டும் என்பன போன்ற பல உயர்ந்த
கருத்துகளை-உண்மைகளை உள்ளடக்கியுள்ள காப்பியமே
சிலப்பதிகாரம். சமய, சமூக, அரசியல் ஒருமைப்பாட்டை
எடுத்துரைப்பது; தொட்ட தொட்ட இடமெல்லாம் இலக்கியச்
சுவை மிக்க பகுதிகளைக் கொண்டது. நாடகத் தன்மை
மிகுந்திருப்பதால் இதனை ஒரு நாடகக் காப்பியம் என்பர்.
சிலம்பின் ஆசிரியர் இளங்கோவின் வரலாறு, சிலம்பு எழுந்த
காலம், சிலம்பின் கதைப்பின்னல், சிலம்பின் சமூக, சமய,
அரசியல் சிந்தனைகள், சிலம்பு வெளிப்படுத்தும் கலைச்சிறப்பு,
இலக்கிய நயம், சிலம்பின் காப்பியக் கட்டமைப்பு முதலான
பகுதிகள் இங்கே சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இங்கு எடுத்துரைக்கப்பட்ட செய்திகள் மட்டும்தாம்
சிலம்பின் சிறப்புச் செய்திகள் என்று எண்ணிவிட வேண்டாம்.
மாணவர்களின் தேவை கருதிக் கருத்துக்கள் இங்குச்
சுருக்கமாகவே தரப்பட்டுள்ளன. இவற்றை ஒரு வழிகாட்டியாக
எடுத்துக் கொண்டு சிலம்பை மேலும் ஆழமாகக் கற்றால்
அதன்பயன் பெரிது; சுவை இனிது; அதன் கருத்துக் கடலில்
மூழ்கி முத்தெடுக்கலாம்; அதன் பயனை, பெருமையை,
நயத்தைப் பன்னாட்டு அன்பர்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள்;
அதுவே சிலம்பைக் கற்றதன் பயன் எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
|
1. |
சாலினி கண்ணகியை எவ்வாறு பாராட்டுகிறாள்?
|
விடை |
2. |
மாடல மறையோன் மூலமாகத் தெரிய வரும் காப்பிய
நிகழ்வுகள் யாவை?
|
விடை |
3. |
கண்ணகி எவ்வாறு அருள்கடவுளாக ஆகிறாள்?
|
விடை |
4. |
சிலம்பு உணர்த்தும் சமூக நம்பிக்கைகளுள் ஒன்றைக் கூறுக.
|
விடை |
5. |
சிலம்பில் இடம் பெறும் முரண் சுவைக்கு ஒரு சான்று தருக.
|
விடை
|
|
|