6.2 ஆறாம் வேற்றுமையும் அதன் பொருள்களும்

பெயரின் பொருளைக் கிழமைப் பொருளாக வேற்றுமைப்படுத்துவது ஆறாம் வேற்றுமை உருபு ஆகும். (கிழமை = உடைமை)

அது, ஆது, என்பன ஆறாம் வேற்றுமை உருபுகள். இவற்றுள், ‘அது’, ‘ஆது’ என்ற உருபுகள் ஒருமைக்கும்,  ‘அ’ என்ற உருபு பன்மைக்கும் வரும். ‘ஆது’ என்னும் உருபு இக்காலத்தில் பெரிதும் வருவதில்லை. ‘அ’ உருபும் வழக்கத்தில் இல்லை. எனினும் செய்யுளில் வரும்போது இவ்வுருபினை அறியலாம்.

ஆறாம் வேற்றுமைக்கு மட்டும் பயனிலை பெயராகவே இருக்கும்.

எடுத்துக்காட்டு

னது கை - அது ஒருமை
னாது கை - ஆது
கைகள் - அ - பன்மை (வழக்கில் இல்லை)

ஆறாம் வேற்றுமையின் பொருள் கிழமைப்பொருள் ஆகும். (கிழமை = உடைமை) உடைமையை உணர்த்தி வருவது கிழமைப்பொருள் எனப்படும். இது தற்கிழமை, பிறிதின்கிழமை என இருவகைப்படும்.


  • தற்கிழமையும் பிறிதின்கிழமையும்
  • தற்கிழமை என்பது தன்னோடு தொடர்பு உடைய (பிரிக்க முடியாத) கிழமை. பிறிதின் கிழமை என்பது தன்னிடமிருந்து வேறான கிழமை.

    எடுத்துக்காட்டு

    கண்ணனது கை - தற்கிழமை
    கந்தனது வீடு - பிறிதின்கிழமை


  • சொல் உருபு
  • ஆறாம் வேற்றுமைக்கு ‘உடைய’ என்பது சொல் உருபாகும்.

    எடுத்துக்காட்டு

    தசரதனுடைய மகன்
    தசரதனுடைய மக்கள்


    என்னுடைய வீடு
    என்னுடைய வீடுகள்


    ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
    பன்மைக்கு அவ்வும் உருபாம்;  ............. தற்கிழமையும்
    பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே!

    (நன்னூல் : 300)


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. பொருத்தி எழுதுக.
    நீங்கல் - கல்வியில் பெரியவர் கம்பர்
    ஒப்பு - புண்ணில்வழி குருதி (குருதி-இரத்தம்)
    எல்லை - காக்கையின் கரியது குயில்
    ஏது (சிறப்பு) - இந்தியாவின் வடக்கு இமயம்.
    2. தற்கிழமை என்றால் என்ன? சான்று தருக.
    3. பிறிதின்கிழமைக்குச் சான்று தருக.
    4. எனது கை - வேற்றுமை உருபை எடுத்து எழுதுக.

    நிரப்புக

    5. ஆறாம் வேற்றுமையின் பொருள் ------ ஆகும்.
    6. தன்னோடு ஒற்றுமை உடைய கிழமை -------.
    7. தன்னின் வேறானது --------- கிழமை எனப்படும்.
    8.

    பின்வருவனவற்றில் தற்கிழமை, பிறிதின் கிழமைகளை எடுத்து எழுதுக.

    எனது வீடு, உனது மாடு, யானையது தந்தம், குரங்கினது வால், அவனது புத்தகம், பூனையது காது.

    9. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு யாது?
    10. ஐந்தாம் வேற்றுமையின் உருபும் பொருளும் யாவை?
    11.

    ஆறாம் வேற்றுமையின் உருபுகள் யாவை? அவற்றுக்குரிய பொருள் யாது?