5.4 தொகுப்புரை |
||||||||||||||||||||||||||||
இப்பாடம், வினா என்றால் என்ன என்பதையும் வினாத் தொடர்களின் வகைகளையும் விளக்குகிறது. வினாவிற்கு ஏற்றவாறு பதில் அளிப்பது விடையாகும். இப்பாடல் விடை என்பதன் வேறு பெயரான இறை என்பதையும் அதன் வகைகளையும் விவரிக்கிறது. பேச்சு அல்லது உரைநடை வடிவங்களில் உள்ள சொற்களை வரிசை மாறாமல் கொள்வதே முறையாகும். ஆனால் செய்யுளில் அவ்வாறு பொருள் கொள்ள யாப்பிலக்கணம் முதலிய காரணங்கள் வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையில் செய்யுளைப் பொருள் கொள்ளும் முறையைப் பொருள்கோள் என்னும் பகுதி உணர்த்துகிறது. |
||||||||||||||||||||||||||||
|