5.4
விலக்கக் கூடியன
நன்னெறிகளைக் கூறும் ஆசாரக்கோவை
விலக்கக் கூடியன எவை என்பதையும் கூறுகிறது. பிறர் மனை நயத்தல், கள்ளுண்ணல்,
களவு செய்தல், கொலை செய்தல், சூதாடல் போன்றவை இகழ்ச்சிக்கும், நரகத்திற்கும்
காரணமான செயல்கள் ஆகும். எனவே இவை விலக்க வேண்டியன என்று வலியுறுத்துகிறார்
ஆசிரியர் (ஆசா கோவை - 37).
5.4.1 நினைக்கக் கூடாதவை
ஒரு தீமை தொடர்ந்து பல தீமைகளுக்குக்
காரணமாகிறது. பொய் பேசுதல், கோள் சொல்லுதல், பிறர் பொருளுக்கு ஆசைப்படல்,
பொறாமை கொள்ளுதல் என இவை நான்கினையும் நினைக்கவும் கூடாது. நினைத்தால் இம்மையில்
பிச்சையெடுக்கும்படி வறுமை வரும். மறுமையில் நரகத்தில் செலுத்திவிடும் என்று
கூறி மக்களை நல்வழிப்படுத்துகிறது (ஆசா கோவை - 38).
5.4.2 பேசக் கூடியவை
ஒருவன் பேச்சு எப்படி இருக்க வேண்டும்? வஞ்சனையின்றி
இருக்க வேண்டும். பயன் உடையதாய் இருக்க வேண்டும்.
எப்படி இருக்கக் கூடாது? ஒருவன் பேசும்
மொழி
வஞ்சனையாய் இருக்கக் கூடாது. பயனற்ற சொல்லாய்
இருக்கக் கூடாது. நாவடக்கமின்றிப் பேசுதல் கூடாது. பிறரைப்
பழித்துரைக்கக் கூடாது. நிலையான நல்லொழுக்கம் உள்ளவர்
செயலாக இவற்றைச் சொல்கிறது ஆசாரக் கோவை.
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத்தவர் |
 |
(ஆசாரக்கோவை - 52)
|
(படிறு = வஞ்சனை; பயனில
= பயனற்ற சொல்; பட்டி உரை = நாவடக்கமில்லாத சொல்; வசை = தூற்றுதல்;
புறன் = கோள்; அசையாத = உறுதியான)
இன்னும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று
பார்ப்போமா? நாம் பிறர்க்கு உதவி செய்ய
வேண்டும்.
அதை நாமே பாராட்டிக் கூறக் கூடாது. பிறர்
இட்ட
உணவை இகழ்தல் கூடாது. தம் அறச் செய்கையையும்
நோன்பையும் தாமே புகழ்தலும் தகாது. ஆகையால்
இவற்றைத் தவிர்க்க வேண்டும் (ஆசா கோவை - 88).
உலகியலில் ஒருவர் எங்காவது புறப்பட்டுக் கொண்டிருக்கும்
பொழுது எங்குப் போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது என்பர்.
கிளம்பும் பொழுது பின்னால் நின்று அழைக்கக் கூடாது,
தும்மக் கூடாது என்பர். பெருவாயின்
முள்ளியாரும்
ஒரு பாடலில் இவற்றைச் சொல்கிறார். பாடலைப் பாருங்கள்.
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார்
வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்று உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம் |
 |
(ஆசாரக்கோவை - 58)
|
(கூவார் = கூப்பிட மாட்டார்; சேறீரோ
= செல்கின்றீர்; இருசார்வு = இரண்டு பக்கங்கள்)
பேச்சு ஒரு கலை, ஒரே செய்தியை ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வகையாகச் சொல்வர். பலரும் பாராட்டும்
வண்ணம் தக்கபடி சொல்வதன்றோ முறை! இது
பற்றி
ஆசாரச் கோவை என்ன சொல்கிறது? மிக விரைவாக
ஒருவரிடம் ஒரு செய்தியைச் சொல்லக்
கூடாது.
பொய்யுரையும் மிகைப்படுத்தலுமின்றிக் கூறுதல் வேண்டும்.
எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதைச் சுருக்கமாகத்
தெளிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். பாடலைப்
பார்ப்போம்.
விரைந்துரையார் மேன்மேல் உரையார்
பொய்யாய்
பரந்துரையார் பாரித்துரையார் - ஒருங்கனைத்தும்
சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி யறிந்து |
 |
(ஆசாரக்கோவை -76)
|
(விரைந்து = வேகமாக; மேன்மேல்
= அடுத்தடுத்து; பரந்து = விரித்து; பாரித்து = விவரித்து;
சில்லெழுத்து =
சில சொற்கள்)
வள்ளுவரும் சொல்வன்மை உடையவரை வெல்வது அரிது
(647) என்பர். சொல்வன்மை உடைய அனுமான் சொல்லின்
செல்வர் என்று பாராட்டப்படுகிறார் அல்லவா?
5.4.3
செய்யக் கூடாதவை
ஒருவர் செய்யும் செயல்களே அவர் எத்தகைய பண்பை
உடையவர் என்பதைக் காட்டும் அல்லவா?
ஒரு பொருளை வீசி எறிதல், கல்லெறிதல், மற்றவரை இகழ்ந்து
பேசுதல், கை தட்டல் முதலியன தீயொழுக்கம் உடையார்
செயல்களாம். எனவே, இவற்றை விலக்க வேண்டும் என்கிறது
ஆசாரக்கோவை (53).
கிடைத்தற்கரியது என்று தெரிந்தவற்றை விரும்புதலும் இழந்த
பொருளுக்கு வருந்தலும், அரிய துன்பத்திற்கு
மனம்
கலங்குதலும் பயனற்ற செயல்கள், இந்தப்
பயனற்ற
செயல்களை விலக்க வேண்டும் என்கிறார் பெருவாயின்
முள்ளியார் (ஆசா கோவை - 89).
|