5.4 தொகுப்புரை

உயிர் எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் என்பதையும் மெய்எழுத்துகள் சொல்லுக்கு இறுதி எழுத்தாக வரும் என்பதையும் இந்தப் பாடம் விளக்கியுள்ளது.

உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதையும் இந்தப் பாடம் உணர்த்தியுள்ளது.

சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் உயிர் எழுத்துகள் யாவை என்பதையும், சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள் யாவை என்பதையும் இந்தப் பாடம் தெரிவித்துள்ளது.

சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள் யாவை என்பதையும் அவற்றில் சில எழுத்துகள் பிறமொழிச் சொற்கள் வாயிலாகத் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதையும் இந்தப் பாடம் அறிவித்துள்ளது.

சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள், மெய்எழுத்துகள் யாவை என்பதையும் இந்தப் பாடம் உணர்த்தியுள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

விடை
2.

சொல்லுக்கு இறுதியில் வரும் மெல்லின மெய் எழுத்துகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

விடை
3.

சொல்லுக்கு இறுதியில் வரும் இடையின மெய் எழுத்துகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

விடை