தலைவி, தோழி, செவிலி, நற்றாய் என்னும் நால்வரும்
அறத்தொடு நிற்பார்கள். தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும்,
நற்றாய் தந்தை, தன் ஐயர்க்கும் அறத்தொடு நிற்பர் (தன் ஐயர் - தமையன்).
முறைகள்
-
களவுப் புணர்ச்சியைச் செவிலி கண்டவிடத்தும்,
காவல் மிகுந்த போதும் தலைவி அறத்தொடு நிற்பாள்.
-
முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி
- எனும் இரு முறைகளில் தோழி அறத்தொடு நிற்பாள்.
முன்னிலை
மொழி |
- |
முன்னிற்பார்க்கு நேரே கூறுதல்.
|
முன்னிலைப்
புறமொழி |
- |
முன்னிற்பார்க்குக் கூற வேண்டிய
செய்தியைப் பிறருக்குக் கூறுவது போலக் குறிப்பிடுவது.
|
(முன்நிற்பார் = எதிரில் இருப்பவர்)
|