3.8 தொகுப்புரை

இப்பாடத் தொகுப்பிலிருந்து பின்வரும் செய்திகளைக் கற்று உணர்ந்தோம்:

  • களவில் நிகழும் புணர்ச்சிகள்.
  • உள்ளப் புணர்ச்சியே முதன்மை இடம் பெற்ற தன்மை; அதற்கான காரணம்.
  • வரைவு மேற்கொள்ளும் முறைகள்.
  • அறநெறிப்படுத்தும் உயர் செயலாகிய அறத்தொடு நிற்றல்.
  • கற்பு வாழ்வின் அமைப்பும் அவ்வாழ்வில் மேன்மேலும் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சிகளும்.
  • களவிலும், கற்பிலும் தலைவன் நிகழ்த்தும் பிரிவுகள்.
  • பிரிவை மேற்கொள்வோர்க்குரிய வரையறுக்கப்பட்ட சிறப்புச் செய்திகள்.
  • தலைமக்கள் இருவரிடமும் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்ய வழி மேற்கொள்ளும் வாயில்களாக வருபவர்களின் செயல்பாடுகள்.
  • துறவறம் பற்றிய வரையறை.

இச்செய்திகள் மூலம் பண்டைத் தமிழர் மேற்கொண்ட பண்பட்ட அகவாழ்வினை அறிய முடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள்-II
1. கற்பின் இரு வகைகள் யாவை?

விடை

2. கற்பில் நிகழும் பிரிவின் வகைகள் யாவை?

விடை

3. காவல் பிரிவை விளக்குக

விடை

4. ஊடல் தணிக்கும் வாயில்கள் யாவர்?

விடை

5. துறவறம் பற்றி விளக்குக.

விடை