1.6 தொகுப்புரை

    இதுகாறும்     மூவிடப்பெயர்கள்,     சுட்டுப்பெயர்கள், வினாப்பெயர்கள் என்னும் மூவகைப் பதிலிடு பெயர்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சி, மாற்றங்கள், புதுவடிவங்கள் ஆகியவற்றைப் பற்றித் தக்க சான்றுகளுடன் விளக்கமாகக் கண்டோம். புதுவடிவங்கள் வரவினால் பழைய வடிவங்கள் சில வழக்கிழந்து போனதை அறிந்து கொண்டோம். பதிலிடு பெயர் ஒன்றில் மாற்றம் ஏற்படும்போது, அதனோடு ஒத்த பிறவற்றிலும் அத்தகைய மாற்றம் ஒழுங்காக நிகழ்வதை அறிந்து கொள்ள முடிகிறது. தன்மைப் பன்மையில் யாங்கள், நாங்கள் ஆகியவற்றில் வரும் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி, முன்னிலையில் நீங்கள், நீர்கள் போன்றவற்றிலும் படர்க்கையில் தாங்கள் என்பதிலும் சுட்டுப்பெயரில் அவர்கள் என்பதிலும் வருவதைக் காணலாம். சுருங்கக்கூறின் பதிலிடு பெயர்களில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பழைய வடிவங்களுக்கும் புதிதாகத் தோன்றிய வடிவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகவும் குறைவு என்பதை இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
தமிழில் உள்ள சுட்டெழுத்துகள் யாவை?
2.
தொல்காப்பியர் குறிப்பிடும் இடைநிலைச் சுட்டுப்பெயர்கள் யாவை?
3.
சுட்டுப்பெயரில் பலரைக் குறிக்க இடைக்காலத்தில் வந்து வழங்கிய சொல் யாது?
4.
தொல்காப்பியர் குறிப்பிடும் வினாப்பெயர்கள் யாவை?
5. யார் என்ற வினாச்சொல் சங்ககாலத்தில் எவ்வாறு வழங்கிற்று? சான்று தருக. விடை
6. இடைக்காலத் தமிழில் யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்பன எவ்வாறு வழங்கலாயின? விடை
7.

உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர் என்றால் என்ன? சான்று தருக.

விடை