|
3.6 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை சொற்பிறப்பு ஆய்விற்கு எங்ஙனம்
சொற்பொருள் ஆய்வு பயனுடையதாக விளங்குகின்றது என்பதைப்
பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன
செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும்
ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
- சொற்பொருள் ஆய்வு இல்லாமல்,
சொற்பிறப்பை அறிந்து
கொள்ளுதல் என்பது இயலாத ஒன்று என்பதை
இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.
- ஒரே வடிவம் கொண்ட அடிச்சொற்களின் வேர்ப்பொருள்
எங்ஙனம் மாற்றமடைந்துள்ளது என்பதையும், சொல் தனது
சிறப்பியல்பால் பொருளைச் சுட்டும் தன்மையினையும்
தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
- சொற்பொருள் சார்புத் தன்மையாலும், இனந்தழுவுதலாலும்,
இயல்பு நிலையிலும், எதிர் நிலையிலும் எவ்வாறெல்லாம்
தன் பொருள் விரிவடைந்து மாற்றங்களைப் பெற்றுள்ளது
என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
‘வேலி’ என்ற சொல் எங்ஙனம் ‘நிலம்' என்ற
சொல்லோடு தொடர்புடையது? |
|
2.
|
‘புல்’ என்ற சொல் எவ்வாறு தென்னை, பனை
முதலியவற்றைக் குறிக்கும்? |
|
3.
|
மயிலின் தோகை பெண்ணுக்குரிய சொல்லாக மாறிய
வடிவத்தைக் குறிப்பிடுக. |
|
4.
|
‘ஆண்டி’ என்ற சொல் உணர்த்தும் இருபொருட்கள்
யாவை? |
|
|