5.2 சொற்பொருள் மாற்றத்திற்கான புறக் காரணங்கள் | |||||||||||||
பொதுவாக வரலாறு, உலகம், மனம், மொழி ஆகியவற்றிலான வேறுபாடுகளுடன் இணைத்துப் பார்க்கும்போது, சொற்பொருள் மாற்றத்திற்குப் பின்வருவனவும் காரணங்களாகலாம் என்பதை அறிய முடிகிறது. 1. உலகில் ஏற்படும் மாற்றங்கள்
ஆட்சி : அரசாட்சி, மக்களாட்சி அடுப்பு : கரி அடுப்பு, மின் அடுப்பு 2. அறிவியல் கண்டுபிடிப்புகள் கதிர் : நெற்கதிர், கிரணம், எக்ஸ்ரே கதிர் 3. சொற்களின் பொருள் பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் பள்ளி : கோயில், பள்ளிக்கூடம் வாக்கு : வார்த்தை, வாக்குச்சீட்டு நெய் : எண்ணெய், நெய். 4. மனித மனவுணர்வு மனப்பாங்கிலான மாற்றங்கள் நாற்றம் : நறுமணம், கெட்ட மணம் 5. சொற்கடன் பேறு நட்சத்திரம் : விண்மீன், திரைப்பட நடிகை விசிறி : விசிறி, ரசிகன்/தொண்டன் 6. மொழியலகுத் தொடர்களின் அலகு குறைப்பு பட்டை : மரப்பட்டை, சாராயம் காவல் : காத்தல், காவல்துறை 7. தேர்ந்தெடுத்த விளக்கம் பாம்புராணி : அரணை, பாம்பின் ராணி
|