1.7 தொகுப்புரை இப்பாடத்தின் மூலமாகக் கதைகளின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. புனைகதை என்பது புதினம், சிறுகதை என்னும் இரு இலக்கிய வகைகளையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல் என்பதை இப்பாடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. புதினத்தின் தோற்றம் குறித்தும், புதின இலக்கிய முன்னோடிகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது. புதினத்தின் அமைப்புக் குறித்தும், கதைக்கரு, கதைப்பின்னல், இழுப்புவிசை, எதிர்பார்ப்பு நிலை, குறிப்புமுரண், பாத்திரப் படைப்பு, நனவோடைமுறை, உரையாடல், சூழல் அமைப்பு, நடை ஆகிய கூறுகள் புதினத்தில் பெறும் இடம் குறித்தும் இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.
|