3.7 தொகுப்புரை

இரண்டாம் பாடத்தின் மூலம் புதினத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்பாடத்தில் தொடக்கக் காலப் புதினம் உட்பட எல்லாக் காலக் கட்டப் புதினங்களையும், உள்ளடக்கம் மற்றும் சார்பு அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பகுத்துக் கண்டோம். புதினத்தின் தொடக்கக் காலம் முதல் இன்றைய நிலைவரை நாம் அறிந்து கொள்ளப் புதின வகைப்பாடுகள் என்ற இப்பாடம் உதவுகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1

சுஜாதாவின் இயற்பெயர் என்ன? அவரது அறிவியல் புதினம் எது?

விடை
2

வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் யார்? அவர்களது படைப்புகளைக் குறிப்பிடுக.

விடை
3
தழுவல் புதினம் என்றால் என்ன? விடை
4
சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் இரண்டினைக் குறிப்பிடுக. விடை
5
நாரண துரைக் கண்ணன் எழுதிய தழுவல் புதினம் எது? விடை