5.6 தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை பெரிய திருமடல் என்ற இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களின் தன்மைகளையும், இவற்றுள் இன்பமே சிறந்தது என்று கூறப்படுவதையும் அறிந்து கொண்டீர்கள்.
பாட்டுடைத் தலைவனின் பல்வேறு பெருமைகளை விளங்கிக் கொண்டீர்கள்.
மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலை, காதல் துயரம், மடல் ஏறத் துணிந்ததன் காரணம் ஆகியவை தெளிவாகப் புரிந்திருக்கும்.
பெண்கள் மடல் ஏறத் துணிந்ததாகக் காட்டப்பட்டதன் காரணம் விளங்கியிருக்கும்.
பெரிய திருமடல் என்ற இலக்கியத்தில் இடம் பெறும் சில பாடல் அடிகளை அறிந்து இருப்பீர்கள்.
பொதுவாகப் பெரிய திருமடல் என்ற இலக்கியம் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

மடல் இலக்கியத்தில் நாற்பொருள்களில் எது சிறப்பித்துக் கூறப்படுகின்றது?

விடை
2.

உஷை என்பவள் யார்?

விடை
3.

திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரை மலரில் தோன்றியவர் யார்?

விடை
4.

திருமாலின் மாலை எது?

விடை
5.

திருமால் வாமன அவதாரம் எடுத்து யாரை அடக்கினார்?

விடை
6.

திருமால் திருக்கண்ண மங்கையில் எவ்வாறு எழுந்தருளி உள்ளார்?

விடை
7.

தலைவி திருமாலை எந்த இடத்தில் கண்டாள்?

விடை

8.

திருமாலிடம் காதல் கொண்ட தலைவியை எவை எவை துன்புறுத்தின?