2.5 தொகுப்புரை தமிழ் இலக்கியத்தில் தொடர்நிலைச்
செய்யுளாலான முதல் பெருங்காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம்
ஆகும். இக்காப்பியத்தின் ஒரு காதையான வழக்குரை காதை என்ற இந்தப் பாடப் பகுதியில்
கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாறு மூலம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்பதும்; பாண்டிய மன்னன் ஆராயாது செய்த தவறே அவனது உயிருக்குக் கூற்றாய்
முடிந்தது என்பதன் மூலம் அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
என்பதும் உணர்த்தப்பட்டுள்ளன.
|