3.4 தொகுப்புரை
மொழிபெயர்ப்பின் தன்மை என்ற இந்தப் பாடத்தில்
பாட
முன்னுரையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் நடைபெறும்
நிகழ்ச்சிகள் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படவேண்டியதன்
அவசியம் சுட்டப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பணி
செய்ய வல்லார் யார்? மொழிபெயர்ப்பது எப்படி?
மொழிபெயர்ப்பின் சிறப்புக் கூறுகள் யாவை என்பன
பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பாளரின்
தன்மைகள் யாவை என்பது பற்றியும், மொழிபெயர்ப்புக்கு
என்ன செய்ய வேண்டுமென்பது பற்றியும், பெயர்களை
மொழிபெயர்க்கலாமா என்பது பற்றியும், ஒப்பிட்டுச்
சரிபார்த்தலின் அவசியம்
குறித்தும், தடுமாற்றம்
தவிர்க்கப்படுதல் வேண்டும் என்பன குறித்தும் உள்ள செய்திகள்
ஓரளவுக்கு வகைப்படுத்தி நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
அறிவுத்தேடல்
எங்ஙனம் உருவாகும்? |
விடை |
2. |
பேராசிரியர்
பட்டாபிராமனைத் திணற வைத்த தமிழ் மொழியாக்கம் பெற்ற
நூல் எது? தொடர் யாது? |
விடை |
3. |
பயன்
செறிந்த தெளிவான மொழியாக்கம் எது? |
விடை |
4. |
மொழிபெயர்ப்பில்
ஒப்பிட்டுச் சரிபார்த்தல் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்?
|
விடை
|
5. |
மொழிபெயர்ப்பில்
இடறி விழும் கண்ணிகள் எவை? |
விடை
|
|
|