5.5 தொகுப்புரை

மொழிபெயர்ப்பின் தன்மை, கவிதை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும் என்ற செய்திகள் விளக்கிக் கூறப்பட்டன. பின்னர் மூலத்தை விஞ்சுதல் முறையா? கவிதையை உரைநடையில் மொழிபெயர்க்கலாமா? மொழிபெயர்ப்பு என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த மொழிபெயர்ப்பு தேவையா? போன்ற வினாக்கள் வழி விளக்கங்கள் தரப்பட்டன. பின்னர் கதை மொழிபெயர்ப்புப் பற்றிச் சொல்லி, மேலைநாட்டார் கொள்கைகள் சுட்டப்பட்டன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. மொழியின் கலைத் தன்மை எங்கே கொலுவிருக்கும்? விடை
2. தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது உயிரோட்டம் தெரியாமைக்கான அடிப்படைக் காரணம் என்ன? விடை
3. இப்பாடத்தில் காட்டிய கண்ணதாசன் பாடலின் ஆங்கில ஆக்கம் தந்தவர் யார்? விடை
4. உயிரோட்டமான மொழிபெயர்ப்பில் இடம் பெறும் அடிப்படைகள் யாவை? விடை
5. மொழிபெயர்ப்பாளரை எதில் கட்டுப்படுத்த இயலாது? விடை
6. கவிதையை உரைநடையில் மொழிபெயர்த்தல் எப்படிப் பொருந்தும்? விடை
7. மொழிபெயர்ப்பின் தனிச்சிறப்பு யாது? விடை
8. மொழிபெயர்ப்புக் கொள்கையாளர்கள் இருவர் பெயர்களைக் கூறுக. விடை