|
6.2
திரைப்பட மொழி மாற்றப் பெயர்ப்பு
|
|
திரைப்படமானது கலை என்ற நிலையைக் கடந்து, ஏராளமான
பொருளீட்டுவதற்கான வாய்ப்பாக மாறியதால், தயாரிப்பாளர்கள்,
ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தினைப் பிற
மொழிகளில் மொழிமாற்றம் (Dubbing) செய்யத் தொடங்கினர்.
உலகமெங்கும் சந்தையை விரிவுபடுத்த வேண்டுமெனில் மொழி
மாற்றம் அவசியம் என்பதை அறிந்து கொண்டனர். புதிய
தொழில்நுட்பம், இயந்திரங்களின் மூலம் மொழிமாற்றம்
(Dubbing) செய்வதனை ஊக்குவித்தது.
இதனால்
ஒரு மொழி பேசிய திரைப்படம், இன்னொரு
மொழிபேசும் திரைப்படமாக மாற்றமடைவது எளிதானது.
நாளடைவில் ‘மொழிமாற்றம்’ என்பது பெரும் வீச்சாகப்
பரவியது.
|
6.2.1
திரைப்பட மொழி மாற்றத்தின் தன்மைகள்
|
பிற மொழியில் வெளியான திரைப்படத்தின் கதை உரையாடல்
பிரதியை நுணுக்கமாக வாசித்துத் தமிழில் மொழிபெயர்க்கும்
மொழி பெயர்ப்பாளர்கள் தமிழுடன் பிற மொழியிலும் புலமை
மிக்கவராக இருத்தல் வேண்டும். இந்த மொழி
மாற்றம்
இருவேறுபட்ட பண்பாட்டு மரபுகளின் மாற்றம் என்பதைக்
கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
மேலும் மூலத்
திரைப்படத்தில் என்ன பொருண்மையில்
சொற்கள்
கையாளப்பட்டுள்ளன என்பது குறித்து நுட்பமான பார்வையுடன்
மொழிபெயர்ப்பது அடிப்படையானதாகும்.
பிறமொழித்
திரைப்படத்தில் கதாபாத்திரங்கள்
பேசும்
உரையாடலை அப்படியே தமிழாக்கம் செய்வது, மொழி மாற்றப்
பெயர்ப்பில் முக்கியம் இல்லை. பேசும்
பாத்திரத்தின்
உதட்டசைவினுக்கும் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளுக்கும்
ஏற்ப, உரிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தின்
உடலசைவுகள், இயக்கம், முகபாவம்
ஆகியனவற்றை
முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் மொழி
மாற்றம்
அமைந்திருத்தல் அடிப்படையானதாகும்.
மூலமொழித்
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒலிப்பதிவின்
வழியே நடிப்பு, உதட்டசைவுடன் ஒத்திசைவாகத் தமிழில் மொழி
மாற்றம் செய்திடும் போது பார்வையாளர்களுக்குத்
தமிழ்த்
திரைப்படம் பார்த்த மனநிலை தோன்றும்.
மூலமொழித்
திரைப்படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சியில்
பாத்திரங்கள் உரையாடுகையில் தேவைப்படும் நேர அளவிற்குள்
தமிழில் மொழி மாற்றம் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு
பொருத்தமான முறையில் மொழி மாற்றம் செய்யப்படும்
திரைப்படத்தில் இடம் பெறும் பாத்திரங்களின் நிறம், தோற்றம்,
இனம், ஆகியனவும் நகரங்கள், ஊர்களின் அமைப்புகளும்,
தமிழகத்திற்கு முற்றிலும் மாறுபட்டதெனினும் அது
தமிழ்
பேசுவதால் தமிழ்த் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகின்றது.
படத்தினுடன் தொடர்பு கொள்ள, தமிழ் மொழி உதவுவதால்,
ஒருவகையில் அவை தமிழ்த் திரைப்படங்களாக
மாற்றம்
பெறுகின்றன. இது மொழி மாற்றத் திரைப்படங்களின் வழியாகப்
பிற நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளும் சமூகவியல் அம்சங்களும்
தமிழில் அறிமுகமாவதற்கான தளத்தை உருவாக்குகின்றன.
|
6.2.2
தமிழில் பிறமொழிப் படங்கள்
|
தமிழில் பல ஆண்டுகளாகப் பிறமொழித் திரைப்படங்கள்
மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஆங்கிலம்,
தெலுங்கு,
மலையாளம், இந்தி போன்ற மொழித் திரைப்படங்கள் மொழி
மாற்றம் மூலம் தொடர்ந்து தமிழ் வடிவம்
பெறுகின்றன.
எழுபதுகளின் பின்னர் தெலுங்குத் திரைப்படங்கள்
அதிக
அளவில் தமிழில் மொழி மாற்றம் பெற்றன. தெலுங்கிலிருந்து
தமிழாக்கப்பட்ட சலங்கை ஒலி, வைஜெயந்தி ஐபிஸ்., போன்ற
திரைப்படங்கள் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடின. அடிதடி,
மாயாஜாலம், சமூகம், பக்தி திரைப்படங்கள் தெலுங்கிலிருந்து
தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன.
தற்சமயம்
ஹாலிவுட்டில் தயாராகும் முக்கியமான ஆங்கிலத்
திரைப்படங்கள், அதிக அளவில் தமிழில்
மொழி
மாற்றப்படுகின்றன. அதிரடிச் சண்டைக்
காட்சிகளுக்கு
முக்கியத்துவம் தந்து தயாரிக்கப்படும் ஜாக்கிசான்
நடித்த
திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் மொழி
மாற்றம்
செய்யப்படுகின்றன. ஹாலிவுட்டில்
பிரமாண்டமாகத்
தயாரிக்கப்படும் ஆங்கிலப் படங்கள், தமிழாக்கப்படுவதனால்,
அசலாகத் தயாராகும் தமிழ்த் திரைப்படங்கள் வசூல் ரீதியில்
பாதிக்கப்படுகின்றன என்று தமிழ்த் திரையுலகினர் கூறுகின்றனர்.
|
6.2.3
மொழியமைப்பு
|
தமிழில் மொழி மாற்றப்பட்டுள்ள திரைப்படத்தின் திரைக்கதை -
உரையாடல் பிரதியை, மூலமொழித் திரைப்படத்தின் கதை
-
உரையாடல் பிரதியுடன் ஒப்பிடுகையில், மொழிமாற்றத்தின்
தனித்தன்மைகளை அறிய இயலும். மேலும் உதட்டசைவு,
நடிப்பினுக்காக மொழி மாற்றத்தில்
செய்யப்படும்
மாறுதல்களையும் அறிந்துகொள்ள முடியும். இது
போன்ற
ஆய்வு, இதுவரை தமிழில் நிகழ்த்தப்படவில்லை.
எனவே
சான்றுகளைத் திரட்டி ஒப்பிட்டு, மொழியமைப்பினைப் பற்றி
அறிய இயலவில்லை.
தெலுங்கு,
மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழில்
மொழிமாற்றம் செய்யும்போது உதட்டசைவு, ஓரளவு தொடர்
அமைப்புகள் பொருந்தி வர வாய்ப்புண்டு. ஏனெனில்
தமிழ்,
தெலுங்கு, மலையாளம் ஆகியன திராவிட
மொழிக்
குடும்பத்தினைச் சார்ந்தவை ஆதலால், ஏவல் வினைகள், ஓரே
வேர்ச் சொல்லினை மூலமாகக் கொண்டிருக்கும். எனவே சில
சொற்கள் திராவிட மொழிகளுக்குள் பொதுவாக
இருக்க
வாய்ப்புண்டு அல்லது சிறிய வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியாக
இருக்கும்.
ஆங்கிலம்,
இந்தி மொழிகளின் சொற்கள், தொடரமைப்புகள்
தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டவை. எனவே அவை தமிழில்
மொழி மாற்றம் செய்யப்படும்போது, உதட்டசைவு, உடலசைவுக்கு
முற்றிலும் பொருந்தி வாரா.
|
தன்மதிப்பீடு
: வினாக்கள் - I
|
|
|
1. |
இந்தியாவில்
திரைப்படம் எதில் முதன்மை
வகிக்கின்றது? |
|
|
|
|
|
|
2. |
திரைப்படத்
துறையில் மொழிபெயர்ப்பின் தேவை
குறித்துக் குறிப்பு வரைக. |
|
|
|
|
|
|
3. |
தொடக்கக்
காலத்தில் திரையரங்குகளில் பேசிய
மொழி பெயர்ப்பாளர்களின் செயற்பாடு பற்றி
விளக்குக. |
|
|
|
|
|
|
4. |
மொழி
மாற்றம் (Dubbing) - சிறு குறிப்பு வரைக. |
|
|
|
|