1.6 தொகுப்புரை கிறித்தவக் கவிதைகள் இயேசுவின் மேன்மையைப் புகழ்ந்து கூறுவனவாக உள்ளன. பிற சமயக் கவிஞர்களும் இயேசுவின் வாழ்வால் கவரப்பட்டுப் பாடல்களைப் படைத்துள்ளனர். கிறித்தவக் கவிதைகள் சமுதாயச் சீர்கேடுகளைக் கடிந்துரைக்கத் தவறவில்லை. கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் தனி வகையாகக் கொள்ளத் தக்கவை. இவை கிறித்தவர்களின் அன்றாட வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றன. |
|