1.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரையிலும் படைப்பிலக்கியமும் சிறுகதையும் பற்றிய செய்திகளைப் படித்தீர்கள். இந்தப் பாடத்தில் நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • படைப்பிலக்கியமும், சிறுகதையும் பற்றிய பொதுச்செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

  • சிறுகதை இலக்கணம் கூறும் செய்திகளையும், சிறுகதை உத்திகளைப் பற்றிய விளக்கங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது.

  • சிறுகதையின் கதைக்கரு, கதைமாந்தர்கள் மூலம் சமூக, குடும்ப, தனி மனிதச் சிக்கல்கள் எங்ஙனம் வெளிப்படுகின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிய முடிந்தது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
ஒரு சிறுகதையின் மையக் கருத்து எது?
2.

வரதட்சணை வாங்குவது குறித்துக் காந்தியடிகளின் கருத்து என்ன?

3.

குடும்பச் சிக்கல்களுக்குரிய சிறுகதைகளை எழுதுவதில் குறிப்பிடத் தகுந்தவர் யார்? குறிப்பிட்ட சிறுகதையின் பெயர் என்ன?

4.

ஒரு கதையில் கதைமாந்தர் எதன் பொருட்டு உருவாக்கப் படுகின்றனர்?