6.5 தொகுப்புரை நண்பர்களே! மேற்கண்ட பாடங்களின் மூலம் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூகச் சிந்தனைகளை அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தில் நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள். சங்க காலம் முதல் இக்காலம் வரையிலும் பெண்களின் நிலை எங்ஙனம் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. படைப்பாளர்கள் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் தம் மூன்று சிறுகதைகளின் கதைச்சுருக்கம், உறவு நிலைகள், அதனைப் பற்றிய படைப்பாளரின் சிந்தனைகள் ஆகியவற்றை அறிய முடிகிறது. பெண் படைப்பாளர்களின் நோக்கும் போக்கும் சமுதாய உணர்விற்கு இடமளிக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் படைப்பாளர்கள் சமூகத்தினரிடம் நல்ல சமூக மனப்பான்மையை எதிர்பார்ப்பதையும் அறிய முடிகிறது. இறுதியாக, சமூக முன்னேற்றத்திற்காக அரசும், சமுதாயமும் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகளை அறிகிறோம்.
|