3.6 தொகுப்புரை
இசை இலக்கண நூற்கள் என்ற
இப்பாடம் இசை
இலக்கண நூற்களான அகத்தியம். இசை நுணுக்கம்,
கூத்த
நூல், சங்கீதரத்னாகரம் பற்றிச் சுருக்கமாகவும்,
பஞ்சமரபு
என்ற இசை இலக்கண நூல் பற்றி
விரிவாகவும்
எடுத்துரைத்துள்ளது.
தொன்மையான இசை இலக்கண
நூலான பஞ்சமரபு
யாழ், பண், பாலை, வங்கிய மரபு, கண்ட
மரபு பற்றிய
இலக்கண அமைதிகளை எடுத்துரைத்துள்ளது.
இசை இலக்கணம் பற்றி உரைப்பதில்
இலக்கியங்களும்
பெரும் பங்காற்றியுள்ளன. இவ்வகையில் சிலப்பதிகாரம் தலை
சிறந்த இசை இலக்கணக் கருவூலமாகத் திகழ்வதனை அறிய
முடிந்தது.
பெருங்கதை,சீவக சிந்தாமணி, பெரியபுராணம்,
பக்தி
இலக்கியங்கள், கல்லாடம், திருப்புகழ்ப்
பாடல்களில்
காணப்படும் இசை இலக்கிய அமைதிகளையும் கண்டுணர
முடிந்தது.
திருப்புகழ் தாள இலக்கணங்களைத்
தெளிவுபடுத்தும்
தாள இலக்கியமாக விளங்குகின்றது.
இலக்கியங்களிலிருந்து இலக்கண
நூற்கள்
தோன்றுகின்றன. இலக்கண நூற்கள் இலக்கியங்களுக்கு வழி
காட்டுகின்றன.
|