| |
மாணவர்களே, இதுவரை கி.பி. 500 முதல் கி.பி. 1650
வரைத்
தமிழகத்தைப் பாண்டவர்கள் ஆட்சி செய்த நிலையை அறிந்தீர்கள்.
இவர்கள் வரலாற்றை அறிய உதவும் மூலங்களாகத் திகழ்பவை
சங்கத் தமிழ் நூல்கள், நாணயம், செப்பேடு, கல்வெட்டு, சாசனம்,
சமய இலக்கியங்கள் முதலியனவாகும் என்பதைப் படித்தீர்கள்.
முற்காலப் பாண்டியர்களுள் பாண்டியன் கடுங்கோன், அரிகேசரி
பராங்குச மாறவர்மன் முதலியோர் சிறந்தவர் ஆவர். இடைக்காலப்
பாண்டியர் நிலை சற்றுத் தாழ்வுற்று விளங்கியது. திருச்சிக்கு
அருகிலுள்ள கண்ணனூரைத் தலைநகராகக் கொண்டு வீரநரசிம்மன்
போசள ஆட்சியைத் தமிழகத்தில் தோற்றுவித்தான். கி.பி. 1264-
இல் போசளர் ஆட்சி நலிவுற்றது. இதன் பின்னர் பாண்டியர்கள்
சோழர்களை வென்று மிகவும் எழுச்சியுற்று நாட்டை ஆண்டனர்.
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் சம்புவரையர் ஆர்க்காடு
மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர்.
பாண்டியர்கள் தங்கள் நாட்டைச் சிறப்பாக நி்ர்வகிக்கப் பல
நாடுகளாகப் பிரித்து ஆண்டனர். அவர்கள் நாட்டைத்
திறமையுடன் நல்லாட்சி செய்து நீதியுடன் வாழ்ந்த நிலையும்
இங்குத் தெளிவாகத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
| 1) |
தென்காசிப் பாண்டியர்களின் வரலாறு பற்றிக்
கூறும் வடமொழி நூலின் பெயர் என்ன?
|
(விடை) |
| 2) |
பாண்டியர்கள் நாடுகளுக்கும்
வளநாடுகளுக்கும்
எந்த அடிப்படையில் பெயர்கள் இட்டனர்?
உதாரணத்திற்கு இரண்டிரண்டு பெயர்களைக்
குறிப்பிடுக.
|
(விடை) |
| 3) |
புரவுவரித்
திணைக்களத்தார் என்போர் யார்?
|
(விடை) |
| 4) |
பாண்டியர்கள்
குதிரைகள் வாங்குவதற்காகப்
பெரும் பொருளைச் செலவிட்டனர் என்பதைக்
குறிப்பிட்ட
பயண எழுத்தாளர் யார்?
|
(விடை) |
| 5) |
பாண்டியர்கள்
குதிரைகள் வாங்குவதற்காகப்
பெரும் பொருளைச் செலவிட்டனர் என்பதைக்
குறிப்பிட்ட
பயண எழுத்தாளர் யார்? |
(விடை) |
|
|