| |
விசயநகரப் பேரரசை அரிகரர், புக்கர் ஆகியோர்
தோற்றுவித்தனர் என்பதை அறிந்து கொண்டீர்கள். ஏறத்தாழத்
தென்னகம் முழுவதும் விசயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள்
இருந்தது. சாளுவகுல மன்னர்களும், துளுவகுல மன்னர்களும்,
ஆரவீடுகுலத்தினரும் தங்கள் ஆட்சியை நிறுவியதைத் தெரிந்து
கொண்டீர்கள். விசயநகர ஆட்சிமுறை மூன்று பிரிவின் கீழ்
அமைந்திருந்தது. அரசன் அளவிடற்கரிய அதிகாரங்களைப்
பெற்றிருந்தாலும் சிறப்பாக நாட்டை ஆண்டான். நீதி நூல்கள்,
தர்ம சாத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே
சட்டங்களைச் செயல்படுத்தினர். அமைச்சரவையோடு
அரசரவையும் இருந்தது. பேரரசனுக்கு உற்ற துணையாய்
விளங்கியவர் அமைச்சர். நிலவரி வருவாய்த்துறை
போன்றவைக்குத்
தனி அமைச்சரும் அவருக்கு உதவியாக
அலுவலர்களும்
இருந்தனர். தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய
உலோகங்களாலான
நாணயங்களில் மன்னர்களின் உருவங்கள்
பொறிக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ண தேவராயருக்குப் பின்பு அச்சுத தேவராயர்
தமிழ்நாட்டு ஆட்சி முறையை மேம்படுத்த எண்ணினார்.
தமிழகத்தைச் செஞ்சி, தஞ்சை, மதுரை என மூன்று
மண்டலங்களாகப் பிரித்தார். வையப்ப நாயக்கரை செஞ்சி நாயக்க
மன்னராகவும், செவ்வப்ப நாயக்கரை தஞ்சை நாயக்க அரசராகவும்,
விசுவநாத நாயக்கரை மதுரை நாயக்க அரசராகவும் நியமித்தார்.
மதுரை நாயக்க அரசில் தளவாய் அரியநாதமுதலியார் என்ற
போர்த்தளபதி பல சீ்ர்திருத்தங்களைச் செய்து சிறப்பான ஆட்சி
நிகழ வழிவகுத்தார். பீஜப்பூர் படைகளின் தாக்குதலால் 17-ஆம்
நூற்றாண்டில் செஞ்சி நாயக்க அரசு அழிந்தது. ஏகோஜிஎன்னும்
மராட்டியர் தஞ்சை நாயக்க மன்னரைக் கொன்று, மராட்டிய
அரசை நிறுவினார். தஞ்சை நாயக்க அரசர்களின் ஆசானாக
விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் என்பவர். இவர்கள் கால
அரசுமுறை, நாணயம், சமயம், கலை முதலியவை பற்றியும்
தெளிவாகத் தெரிந்து கொண்டீர்கள்.
|