நண்பர்களே! இதுவரை வைணவத் தத்துவம் பற்றிய
செய்திகளை அறிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
1) |
வைணவம் குறிப்பிடும் இருபத்தாறு தத்துவங்கள்
எவை
எவை என்பது பற்றியும் அவை சித்து, அசித்து,
ஈசுவரன் என்னும் முப்பொருள்களாக
வகைப்படுத்தப்படுகின்றன
என்பது பற்றியும் அறிந்து
கொண்டீர்கள். |
2) |
சித்து முதலிய மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று
பிரியாமல்
எக்காலத்தும் கூடியுள்ள நிலையினை உடல் -
உயிர்க்கொள்கை மூலம் வைணவம் நிறுவுகின்றது
என்னும் உண்மையையும் நீங்கள் விளங்கிக்
கொண்டிருப்பீர்கள். |
3) |
இக்கொள்கையினை ஒட்டியே வைணவக்கோட்பாடு
விசிட்டாத்வைதம் எனப்பெயர் பெற்றது என்பதையும்
அறிந்திருப்பீர்கள். |
4) |
இத்தத்துவத்தோடு மேலும் சில கோட்பாடுகள் வைணவ
சம்பிரதாயத்தில் வழக்கில் உள்ளன. அவற்றுள்
முக்கியமானவை அர்த்தபஞ்சகம் ரஹஸ்யத்திரயம்
(மூன்று மந்திரங்கள்) முதலியன என்பதையும் நீங்கள்
விரிவாக உணர்ந்து இருப்பீர்கள். |
|