அல்லா
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். இவர் நெல்லைக்கு அருகில் உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் செய்கு முகம்மது அலியார். ‘வள்ளல் சீதக்காதி’யின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சீறாப்புராணத்தை எழுதினார். முதுமொழி மாலை, சீதக்காதி நொண்டி நாடகம் ஆகிய நூல்களையும் உமறுப்புலவர் எழுதினார். அரபு மொழியிலமைந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் சீறாப்புராணம் சுவைபடக் கூறுகிறது. இவரது காலம் 17ஆம் நூற்றாண்டாகும். இவர் எட்டயபுர மன்னர் அவைக்களப் புலவராயிருந்த கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் பயின்றார். வாலைவாரிதி என்னும் வடநாட்டுப் புலவனை எட்டயபுரம் அரண்மனையில் வாதில் வென்றார்.