அல்லா
பாடல்
Poem
அல்லா
வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும்
மறை தெளிந்த மற்றை யோர்க்கும்
ஊனுடைய பல்லுயிர்க்கும் உணர்வாகி
பேரொளியாய் ஓங்கி நின்ற
ஞானமெனும் பரம்பொருளே! அழியாத
பெரும்பேறே! நடுநின் றென்றும்
ஊனமற விளையாடி எவ்விடத்தும்
எந்நாளும் உறையும் கோவே.
- உமறுப்புலவர்
