சிவன்
பாட அறிமுகம்
Introduction to Lesson

சிவன்
நம் பாடப்பகுதி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் ஆகும். தேனாகிய சிவபெருமான் மீது பாடப் பெற்ற பாமாலை தேவாரம் ஆகும்.இதனை, தே+ஆரம் எனப் பிரித்து இனிய பாக்களால் ஆன மாலை என்றும் பொருள் கொள்வர். இந்த வகைப்பாடல் யாவும் தமிழிசைப் பாடல்களாக அமைத்துள்ளன. நமது பாடப்பகுதியானது பிரமபுரப் பதிகம் என்னும் பகுதியில் இருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது. இதனுடைய பண் நட்ட பாடைப் பண்ணாகும். பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடியமையால் இது பிரமபுரப் பதிகம் என வழங்கப் பெறுகிறது.