6. சமய இலக்கியம்

சிவன்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் மீது பாடப்பெறும் பாடல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர், அப்பர் எனும் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி எனும் மூவரால் பாடப் பெற்றவை தேவாரம் எனவும், மாணிக்கவாசகரால் பாடப்பெற்றது திருவாசகம் எனவும் அழைக்கப்பெறுகின்றன. சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவர்களால் பாடப்பெற்ற தேவாரமும், திருவாசகமும் தமிழ்மொழியின் அரிய செல்வங்கள் ஆகும்.