திருமால்
பாடல் கருத்து
Theme of the Poem
நல்ல குடிப்பிறப்பை அளிக்கும். இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுக்கும்.
அடியவர்கள் துய்க்கும் துயரத்தை எல்லாம் அடியோடு அழிக்கும்.
சிறந்த வானுலக வாழ்வைத் தரும். மிக்க அருளோடு வீட்டுலக இன்பத்தைக் கொடுக்கும்.
வாழ்வில் எல்லா வெற்றிகளையும் கொடுக்கும். பெற்ற தாயைக் காட்டிலும் தேவையான எல்லாவற்றையும் செய்யும்.
இத்தகைய திருமாலின் திருப்பெயரை நாளும் போற்றுவோம்.