6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் யார்?

சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் சிவபெருமான்.

2.  சமயக் குரவர்களின் சமயம் எது?

சமயக் குரவர்களின் சமயம் சைவம்.

3.  காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் யார்?

காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் சிவபெருமான்.

4.  திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் என்ன?

திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர்.

5.  திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் எது?

திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி.

6.  தேவாரத்தை இயற்றியவர்கள் யாவர்?

தேவாரத்தை இயற்றியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார்.

7.  திருஞானசம்பந்தருக்குப் பால் ஊட்டியவர் யார்?

திருஞானசம்பந்தருக்குப் பால் ஊட்டியவர் உமாதேவியார் ஆவார்.

8.  பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்றைக் கூறுக.

பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்று திருவாசகம்.

9.  ‘தோடுடைய செவியன்’ என்று பாடியவர் யார்?

'தோடுடைய செவியன்’ என்று பாடியவர் திருஞானசம்பந்தர்.

10.  மாணிக்கவாசகரால் பாடப் பெற்ற நூல் எது?

மாணிக்கவாசகரால் பாடப் பெற்ற நூல் திருவாசகம்.