இறைவனாகிய சிவபெருமான் தனது காதுகளில் தோடு எனும் அணிகலனை அணிந்தவர். காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர். தூய வெண்மையான பிறை நிலவைத் தனது தலையில் சூடிக் கொண்டிருப்பவர். சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடம்பில் திருநீறாகப் பூசிக் கொண்டிருப்பவர். அதனாலேயே எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருடராக இருப்பவர். தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரம்மதேவனால் முன்னொரு காலத்தில் வணங்கப்பெற்ற பெருமைக்குரியவர். மிகவும் சிறப்பு வாய்ந்த பிரமாபுரம் என்னும் திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவன் இவராகும்.