சிவன்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் -----------.
சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் சிவபெருமான்
2. திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் -------------.
திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர்
3. மாணிக்கவாசகர் இயற்றிய நூல் -------------.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல் திருவாசகம்.
4. பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்று -------------.
பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்று திருவாசகம்
5. திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் ------------.
திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி
6. தேவாரத்தை இயற்றியவர்கள் -----------, -------------. -----------.
தேவாரத்தை இயற்றியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
7. காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் -------------.
காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் சிவன்
8. இறைவன் அன்னையிடம் ----------- கொடுக்கச் சொன்னார்.
இறைவன் அன்னையிடம் பால் கொடுக்கச் சொன்னார்.
9. அன்னை ---------- பால் கொணர்ந்தார்.
அன்னை பொற்கிண்ணத்தில் பால் கொணர்ந்தார்.
10. சமயக் குரவர்களின் சமயம் ------------.
சமயக் குரவர்களின் சமயம் சைவம்