திருமால்
பொது அறிமுகம் 
 Introduction to Lesson  
            அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
இறைவனை வழிபடுவது மக்களின் இயல்பு. வழிபாடு என்பதற்குப் பின்பற்றி ஒழுகுதல் என்று பொருள். அதாவது, தன்னால் வழிபடப்பெறும் இறைவனின் அருள் நெறிகளைப் பின்பற்றி ஒழுகுதலாகும்.
இப்பாடல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் உள்ளது. இது பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவ சமயத்தாரின் தமிழ் வேதமாகப் போற்றப் பெறுகிறது. இப்பாடல்களை நாதமுனி என்பவர் தொகுத்தார். இதற்குத் திராவிட வேதம் என்ற பெயரும் உண்டு.