6. சமய இலக்கியம்

திருமால்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


திருமங்கை ஆழ்வார்

இவரது இயற்பெயர் நீலன். பெற்றோர் ஆலிநாடர், வல்லித்திரு ஆவர். பிறந்த ஊர் திருக்குறையலூர். இவர் முதலில் சோழ மன்னனின் படைத்தலைவராக இருந்தார். பின் அம்மன்னனால் திருமங்கை நாட்டு அரசன் ஆனார். திருமணக் கோலத்தில் வந்த திருமாலிடம் எட்டெழுத்து அறிவுரை பெற்றுத் திருமங்கை ஆழ்வார் ஆனார் என்று சொல்வர்.

இவர் எழுதிய இப்பாடல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் உள்ளது. ஆழ்வார்கள் திருமால்மீது கொண்ட பேரன்பின் மேலீட்டால் பாடிய நாலாயிரம் பாடல்களின் தொகுதிக்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று பெயர்.