6. சமய இலக்கியம்

திருமால்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை எழுதியவர்கள் யாவர்?

அ) சமயக் குரவர்கள்

ஆ) சமணப் புலவர்கள்

இ) பன்னிரு ஆழ்வார்கள்

ஈ) வைணவப் புலவர்கள்

இ) பன்னிரு ஆழ்வார்கள்

2.  ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் யாரைக் குறிக்கிறது?

அ) சிவன்

ஆ) திருமால்

இ) அல்லா

ஈ) புத்தர்

ஆ) திருமால்

3.  திருவாய் மொழி எத்தனைப் பகுதிகளைக் கொண்டது?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

இ) நான்கு

4.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எச்சமய நூல்?

அ) சைவம்

ஆ) புத்தம்

இ) வைணவம்

ஈ) கிறித்துவம்

அ) வைணவம்

5.  திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர்?

அ) திருக்குறையலூர்

ஆ) திருக்கண்ணபுரம்

இ) திருக்கழுக்குன்றம்

ஈ) திருவண்ணாமலை

அ) திருக்குறையலூர்

6.  திருமாலை வழிபட்டுச் சிறப்படைந்தவர்கள்

அ) சிவத்தொண்டர்கள்

ஆ) ஆழ்வார்கள்

இ) நாயன்மார்கள்

ஈ) கிறித்துவர்கள்

ஆ) ஆழ்வார்கள்

7.  திருமங்கை ஆழ்வாருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர்

அ) நீலன்

ஆ) நம்மாழ்வார்

இ) பூதத்தாழ்வார்

ஈ) பொய்கை ஆழ்வார்

அ) நீலன்

8.  திருமங்கை ஆழ்வார் எழுதிய பாடல்கள் எந்த நூலில் இடம் பெற்றள்ளன?

அ) தேவாரம்

ஆ) திருவாய் மொழி

இ) திரிகடுகம்

ஈ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

ஈ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

9.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் யாரைப் பற்றிப் பாடப்படும் நூல்?

அ) சிவன்

ஆ) திருமால்

இ) இயேசு

ஈ) அல்லா

ஆ) திருமால்

10.  வழிபாட்டுப் பாடலின் பொருள் யாது?

அ) பின்பற்றி ஒழுகுதல்

ஆ) இறைவனை வழிபடுதல்

இ) கடவுளை நினைத்தல்

ஈ) கடவுளுக்கு அடிபணிதல்

அ) பின்பற்றி ஒழுகுதல்