திருமால்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் -------- சமயத்தாரின் தமிழ் வேதமாய்ப் போற்றப் பெறுகிறது.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வைணவ சமயத்தாரின் தமிழ் வேதமாய்ப் போற்றப் பெறுகிறது.
2. திருமங்கை ஆழ்வார் --------- என்ற மந்திரத்தைக் கண்டு கொண்டதாகக் கூறினார்.
திருமங்கை ஆழ்வார் நாராயணா என்ற மந்திரத்தைக் கண்டு கொண்டதாகக் கூறினார்.
3. திருவாய் மொழி ----------- பகுதிகளை உடையது.
திருவாய் மொழி நான்கு பகுதிகளை உடையது.
4. திருமால் ---------- கோலத்தில் திருமங்கை ஆழ்வாருக்குக் காட்சி தந்தார்.
திருமால் திருமணக் கோலத்தில் திருமங்கை ஆழ்வாருக்குக் காட்சி தந்தார்.
5. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் --------.
திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் நீலன்
6. திருமங்கை ஆழ்வார் --------- மன்னரின் படைத் தலைவராக இருந்தார்.
திருமங்கை ஆழ்வார் சோழ மன்னரின் படைத் தலைவராக இருந்தார்.
7. திருமணக் கோலத்தில் வந்த திருமாலிடம் ------------ மந்திரம் அருளுரை பெற்றார்.
திருமணக் கோலத்தில் வந்த திருமாலிடம் எட்டெழுத்து மந்திரம் அருளுரை பெற்றார்.
8. திருமங்கை ஆழ்வார் --------- நாட்டுக்கு மன்னராக இருந்தார்.
திருமங்கை ஆழ்வார் திருமங்கை நாட்டுக்கு மன்னராக இருந்தார்.
9. திருமால் வணக்கம் மிக்க அருளோடு வீட்டுலகு ----------- கொடுக்கும்.
திருமால் வணக்கம் மிக்க அருளோடு வீட்டுலகு இன்பம் கொடுக்கும்.
10. திருமாலை வணங்குபவர்களுக்கு வீட்டுலக ------------- கிடைக்கும்
திருமாலை வணங்குபவர்களுக்கு வீட்டுலக இன்பம் கிடைக்கும்.