திருமால்
பாட அறிமுகம்
Introduction to Lesson

திருமால்
எந்த ஒரு காரியம் செய்தாலும் இறைவனை வணங்கி வாழ்த்திச் செயல்களைத் தொடங்குவது மக்களின் இயல்பு. அவரவர் சமயத்திற்குத் தக்கவாறு கடவுளை வழிபடுவதால் வழிபாட்டுப் பாடல் என்று பெயர் பெற்றது.
வழிபாடு என்பது இறைவனின் அருள் நெறிகளைப் பின்பற்றி ஒழுகுதலாகும். சமயங்கள் பல, பல இருந்தாலும் அந்த அந்தச் சமயங்கள் தமிழை வளர்ப்பதில் மிகவும் பாடுபட்டு இருக்கின்றன.
இறைவன் சாதி, மதம் இல்லாதவன். ஆனால் இயற்கை வடிவமாக இருக்கும் கடவுளைத் தங்கள் சமயத்திற்குத் தக்கபடி மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்த்தி வணங்குகின்றனர். அதில் திருமாலின் பாடல் ஒன்று இங்குப் பாடமாக வைக்கப் பெற்றுள்ளது.